சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27,858 பேருக்கு வேலை வழங்கப் பட்டிருப்பதாகவும், மொத்தமாக 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், உண்மை நிலையை விளக்க வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது …
Read More »தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். புதுவை கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன் பி என்ற உடலுக்கரு கேடு விளைவிக்கும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது அந்த ரசாயனம் புற்றுநோயை உருவாக்கும் என தெரியவந்தது. இதையடுத்து புதுவையில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை …
Read More »ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது
சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது. இன்சாட்-3டிஎஸ் எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 27.30 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று மதியம் 2.05 மணிக்கு தொடங்கியது. இந்திய வானிலை …
Read More »கிராமப்புறங்களில் அரசு சார்பில் கடந்த 2001-க்கு முன்பு கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகள் சீரமைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் கடந்த 2001-ம் ஆண்டுக்கு முன்பு பல்வேறு அரசுத் திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகள், அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி செலவில் பழுதுபார்த்து, சீரமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசியதாவது: …
Read More »அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைக்கு பிப்.29-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வரும் பிப்.29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி, வீட்டு வசதித்துறை செயலர் சி.சமயமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனுமதியற்ற மற்றும் வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் கடந்த 2016-ம் ஆண்டு அக். 20-ம் தேதி அல்லது அதற்கு முன் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளையும் வரன்முறைப்படுத்த, 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் இம்மாதம் …
Read More »வானியல் ஆய்வுக்கான `எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோள் நியூட்ரான் நட்சத்திரம் தொடர்பான தரவுகள் சேகரிப்பு
சென்னை: எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் மூலம் கிராப் பல்சர் எனும், நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. வானியல் நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் கடந்த ஜன. 1-ம் தேதி பூமியில் இருந்து 650 கி.மீ. உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம் கருந்துளை, நியூட்ரான் …
Read More »ஜூன் மாதத்துக்குப் பிறகு ஃபார்முலா 4 கார் பந்தயம்: தமிழக அரசு தகவல் @ சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: ஜூன் மாதத்துக்குப் பிறகு கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அந்த இடத்தை கடக்கும்போது ஒலி கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும். மருத்துவமனையும் இதற்கு அனுமதி அளித்துள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 5-ம் தேதி தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், …
Read More »வெற்றி துரைசாமியின் உடல் செவ்வாய்க்கிழமை சென்னையில் தகனம்: மனிதநேய அறக்கட்டளை
சென்னை: சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமி, விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடலுக்கு செவ்வாய்க்கிழமை (பிப்.13) பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், தொடர்ந்து கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக மனிதநேய அறக்கட்டளை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் மனிதநேய கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு சைதை துரைசாமி அவர்களின் …
Read More »இன்று தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தொடக்கம்!
தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வுகள் தொடங்குகின்றன. பிப்ரவரி 29ம் தேதி வரை இந்த தேர்வுகள் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர்.அதில் தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் 12 ம் வகுப்புக்கு மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும், 11ம் வகுப்புக்கு …
Read More »Maruti Ertiga: மார்க்கெட்டை அதிர வைக்கும் மாருதியின் 7 சீட்டர் கார்..! 26KM மைலேஜ்
Maruti Ertiga 7 Seater Car Sales:மாருதி சுசுகி எர்டிகா கார்களின் விற்பனை 10 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. இதன் மூலம், நாட்டில் வேகமாக விற்பனையாகும் எம்பிவி கார் என்ற பெருமையை எர்டிகா பெற்றுள்ளது. எர்டிகா மிட்ரேஞ்ச் MPV பிரிவில் 37.5% விற்பனை பங்கைக் கொண்டுள்ளது. எர்டிகா பெரும்பாலும் இளம் வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது. அதே நேரத்தில், முதல் முறையாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாகவும் இந்த கார் மாறியுள்ளது. …
Read More »