Breaking News
Home / செய்திகள் / Maruti Ertiga: மார்க்கெட்டை அதிர வைக்கும் மாருதியின் 7 சீட்டர் கார்..! 26KM மைலேஜ்

Maruti Ertiga: மார்க்கெட்டை அதிர வைக்கும் மாருதியின் 7 சீட்டர் கார்..! 26KM மைலேஜ்

Maruti Ertiga: மார்க்கெட்டை அதிர வைக்கும் மாருதியின் 7 சீட்டர் கார்..! 26KM மைலேஜ்

Maruti Ertiga 7 Seater Car Sales:மாருதி சுசுகி எர்டிகா கார்களின் விற்பனை 10 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.

இதன் மூலம், நாட்டில் வேகமாக விற்பனையாகும் எம்பிவி கார் என்ற பெருமையை எர்டிகா பெற்றுள்ளது. எர்டிகா மிட்ரேஞ்ச் MPV பிரிவில் 37.5% விற்பனை பங்கைக் கொண்டுள்ளது. எர்டிகா பெரும்பாலும் இளம் வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது. அதே நேரத்தில், முதல் முறையாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாகவும் இந்த கார் மாறியுள்ளது.

மாருதி நிறுவனம் கொடுத்துள்ள விளக்கத்தின்படி, எர்டிகாவை வாங்கிய வாடிக்கையாளர்களில் 41% பேர் முதல் முறையாக காரை வாங்குபவர்கள். இதில் சிறப்பு என்னவென்றால், எர்டிகாவை வாங்கும் வாடிக்கையாளர்களில் 66% பேர் ஷோரூமிற்கு வருவதற்கு முன்பே அதை வாங்க முடிவு செய்துள்ளனர். மாருதியின் ஸ்டைலான மற்றும் நம்பகமான எர்டிகா, நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்தைகளில் 37.5% சந்தைப் பங்கைக் கொண்டு நாடு முழுவதும் அதிகம் விற்பனையாகும் MPV என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாருதி எர்டிகாவின் அம்சங்கள்

மாருதி எர்டிகாவின் டாப் வேரியண்ட்கள் ஏராளமான அம்சங்களுடன் வருகின்றன. 7-சீட்டர் MPV ஆனது 17.78 cm (7-inch) SmartPlay Pro டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ArcGIS சரவுண்ட் சென்ஸ் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் கொண்ட MID மற்றும் Suzuki -லிருந்து 40 க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த காரில் ரிமோட் ஏசி, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், க்ரூஸ் கன்ட்ரோல், மெஷின் கட் அலாய் வீல்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

மாருதி எர்டிகா இடவசதி

மாருதி எர்டிகா அதன் செக்மென்ட்டில் பயன்பாடு மற்றும் இடவசதியிலும் சிறந்து விளங்குகிறது. இது ஏர்-கூல்டு கப் ஹோல்டர்கள், யூட்டிலிட்டி பாக்ஸுடன் முன் வரிசை ஆர்ம்ரெஸ்ட், பாட்டில் ஹோல்டர்கள் மற்றும் ஒவ்வொரு வரிசை இருக்கைகளிலும் சார்ஜிங் சாக்கெட் ஆகியவற்றைப் பெறுகிறது. பின்பக்க பயணிகளுக்கு ரூடப் டாப் ஏசி வென்ட்கள் மற்றும் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இது இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கு சாய்வு மற்றும் பிளாட் போல்டு செயல்பாட்டைக் கொண்டுள்ளது. இது கேபினுக்குள் இடத்தை அதிகரிக்கும். இது தவிர 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனும் டாப் வேரியண்டுகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

மைலேஜ் கொடுக்கும் எர்டிகா

மாருதி எர்டிகா புதிய தலைமுறை கே-சீரிஸ் 1.5 லிட்டர் டூயல் ஜெட், டூயல் விவிடி எஞ்சின் மற்றும் ப்ரோக்ரசிவ் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் இயக்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 102 பிஎச்பி பவரையும், 136.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். காருடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் பெட்ரோலில் லிட்டருக்கு 20.51 கிமீ மைலேஜையும், சிஎன்ஜியில் 26.11 கிமீ/கிமீ மைலேஜையும் தருகிறது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *