சென்னை: சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தில், அரசு மருத்துவர்களின் பங்களிப்புடன் கூடிய சேமநல நிதி ரூ.7 கோடியினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்கிழமை 7 குடும்பங்களுக்கு வழங்கினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது, “தமிழக அரசுப்பணிகளில் பணிபுரிந்து வருகின்ற மருத்துவர்கள், எதிர்பாராத வகையில் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களைச் சார்ந்த வாரிசுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கிட மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு நிதி 2020ஆம் ஆண்டு …
Read More »வங்கிகள், தபால் நிலையங்கள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு: தேர்தல் ஆணையம் ஏற்பாடு
சென்னை: வரும் மக்களவை தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, வங்கிகள், தபால் நிலையங்களில் வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மற்றும் தபால் துறை (டிஓபி) ஆகிய இரண்டு முக்கிய அமைப்புகளுடன் தேர்தல் ஆணையம் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டது. தேர்தல் தொடர்பான கல்வியறிவை பெற ஏதுவாக பள்ளிகள் மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் அவற்றை …
Read More »விவசாயிகளுக்கு தானிய ஈட்டுக்கடன் வரம்பு ரூ.25 லட்சமானது: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்
சென்னை: கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் அனைத்து வகை கடன்களுக்கும் 2023-24-ம் ஆண்டுக்கான குறியீட்டை அதிகரித்து மறு நிர்ணயம் செய்து வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள், தங்களது மாவட்டங்களில் விளைபொருட்களை சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்று பயன்பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. …
Read More »6 வயது பூர்த்தியானால் மட்டுமே 1ம் வகுப்பில் அனுமதி: மத்திய அரசு அறிவுரை!
சென்னை: குழந்தைகளுக்கு 6 வயது ஆன பிறகே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தேசிய கல்வி கொள்கை – 2020 அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், பிற மாநிலங்களில் இந்த கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையின்படி, 5-3-3-4 என்ற அடிப்படையில் கல்வி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, …
Read More »BOULT Astra Neo | 1099 விலையில் கேமர்களுக்கான TWS அறிமுகப்படுத்தியது போல்ட்..!
இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் வியரபிள் நிறுவனமான BOULT, இன்று அதன் அடுத்த மாடலான அஸ்ட்ரா நியோவை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. கேமிங் பிரியர்களை மனதில் வைத்து இந்த TWS ஹெட்செட்டை வடிவமைத்திருக்கிறார்கள். கேமர்களுக்காக வடிவமைக்கப்பட்ட, அஸ்ட்ரா நியோ குறைந்த லேட்டன்ஸியைக் கொண்டுள்ளது. இதுஇணையற்ற கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. 70 மணிநேர விளையாட்டு நேரம், Zen™ Quad Mic ENC(Environment Noise Cancellation) ஆகியவற்றுடன், இது கேமிங்கை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது. அதன் …
Read More »சென்னையில் பல இடங்களில் 2ஆவது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை.. சிக்கும் முக்கிய ஆவணங்கள்?
சென்னை: மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சென்னை கிளை உட்பட பல இடங்களில் நேற்று தொடங்கிய ரெய்டு இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே பல இடங்களில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை சோதனை என்பது தொடர்ந்து வருகிறது. லோக்சபா தேர்தலும் நெருங்கி வரும் நிலையில், சோதனை மேலும் அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது. ரெய்டு: இதற்கிடையே நேற்றைய தினம் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் …
Read More »சென்னை மக்களுக்கு ஸ்வீட் நியூஸ்! கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை திறந்துவைத்தார் முதல்வர்
சென்னை: நெம்மேலியில் ரூ.2,465 கோடியில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி – 1 கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் நெம்மேலி – 2 திட்டத்தில் 15 கோடி லிட்டர் திறன் உடைய சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி கடந்த 2019ல் தொடங்கப்பட்டது. கடல்நீர் செல்லும் வகையில் குழாய், …
Read More »சென்னை கவுன்சிலர்கள் கட்சி பேதம் இல்லாமல் ஒரே குரலில் கேட்டதுமே.. மேயர் பிரியா தந்த இன்ப அதிர்ச்சி
சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு இதுவரை ரூ.45 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை நேற்று பட்ஜெட் மீதான விவாதக் கூட்டத்தில் மேயர் பிரியா வெளியிட்டார். தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகரமான சென்னையின் பட்ஜெட் வழக்கமாக தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்படும். அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி …
Read More »சென்னையில் இருந்து திருப்பதி போக பிளான் பண்றீங்களா.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பை உடனே பாருங்க
சென்னை: பெங்களூர்- ஜோலார்பேட்டை வழித்தடத்தில் பராமரிப்பு பணி மற்றும் என்ஜினீயரிங் வேலை நடைபெற இருப்பதால், சென்னை சென்டிரல் – திருப்பதி, பெங்களூர், மைசூர் ரயில் சேவைகள் குறிப்பிட்ட சில நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து ஏராளமான பெருமாள் பக்தர்கள் திருப்பதிக்கு ரயிலில் சென்று வருவது வழக்கம்.. அவர்கள் கீழ்கண்ட நாட்களில் திருப்பதி செல்வதாக இருந்தால் மாற்றிக்கொள்ளலாம். ஏனெனில் திருப்பதி செல்லும் ரயில்கள் பிப்ரவரி 27, …
Read More »6000 வெள்ள நிவாரணம்.. சென்னையில் 5.5 லட்சம் குடும்பங்களுக்கு ஏமாற்றம்.. என்ன நடக்கிறது?
சென்னை: சென்னையில் ரேஷன் கார்டு இல்லாதால் 6000 வெள்ள நிவாரணம் இதுவரை பெறமுடியாத 5.5 லட்சம் குடும்பங்கள் ஏமாற்றத்தில் உள்ளன. அரசு அவர்களிடம் விண்ணப்பம் வாங்கி இரண்டரை மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அதுபற்றி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடாதது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் மிகஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு சுமார் 36 …
Read More »