Breaking News
Home / செய்திகள் / சென்னை கவுன்சிலர்கள் கட்சி பேதம் இல்லாமல் ஒரே குரலில் கேட்டதுமே.. மேயர் பிரியா தந்த இன்ப அதிர்ச்சி

சென்னை கவுன்சிலர்கள் கட்சி பேதம் இல்லாமல் ஒரே குரலில் கேட்டதுமே.. மேயர் பிரியா தந்த இன்ப அதிர்ச்சி

சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு இதுவரை ரூ.45 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை நேற்று பட்ஜெட் மீதான விவாதக் கூட்டத்தில் மேயர் பிரியா வெளியிட்டார்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகரமான சென்னையின் பட்ஜெட் வழக்கமாக தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்படும். அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி 21ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த மேயர் பிரியா, வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளதாக 82 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னையில் நிலத்திட நீர்மட்டம் உயரும் வகையில், சென்னையில் உள்ள 8 நீர்நிலைகள் ரூ.10 கோடியில் புனரமைக்கப்படும், மழைநீர் தேங்குவதை தடுக்க குளங்கள் மற்றும் பூங்காக்களில் ‘ஸ்பான்ச் பார்க்’ அமைக்கப்படும், 200 வார்டு கவுன்சிலர்களுக்கும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் ‘கையடக்க கணினி, அரசு பள்ளிகளை சீரமைப்பது, பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம் அமைப்பது, பள்ளி மாணவர்களுக்கு ‘ஷூ’ மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐடி கார்டு, சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த நிலையில், 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் சென்னை மாநகராட்சி கட்டிடத்தின் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடந்தது. அப்போது கவுன்சிலர்களின் பல்வேறு கேள்விக்கு மேயர் பிரியா பதில் அளித்து பேசினார். நகரமைப்பின் நிலைக்குழு தலைவரான திமுகவைச் சேர்ந்த இளைய அருணா, நேற்று விவாதத்தில் பேசும் போது, சென்னையில் மிகப்பெரிய சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை இல்லை என்று குற்றம்சாட்டினார். மேலும்தமிழில் பெயர் பலகை வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டது போல கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதியை ரூ.60 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதேபோல் திமுகவைச் சேர்ந்த மண்டலக்குழு தலைவர் சரிதா பேசுகையில், பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம் சிறப்பான திட்டம் என்று பாராட்டியதுடன், மண்டலக் குழு தலைவர்களுக்கு சிறப்பு மேம்பாட்டு நிதி என்ற புதிய நிதி திட்டத்தை அறிவித்து ஆண்டுக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கல்வி நிலைக்குழு தலைவரான திமுகவைச் சேர்ந்த விஸ்வநாதன் பேசுகையில், மாணவர்களுக்கு அடையாள அட்டை, குழந்தைகள் பாதுகாப்பு குழு போன்ற திட்டங்களை பாராட்டினார்.. திமுக கவுன்சிலர் விஸ்வநாதனுமே, மேயருக்கு மேம்பாட்டு நிதி உயர்த்தப்பட்டது போல, கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதியை ரூ.60 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதேநேரம் கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்களை மீண்டும் சாலையில் விட்ட பின்னர் அதற்கு சொறி பிடிப்பதாக குற்றம்சாட்டினார். அதற்கு பதில் அளித்து பேசிய சென்னை மாநகர கமிஷனர் ராதாகிருஷ்ணன், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் போது தடுப்பூசிதான் போடுகிறோம். ஊசியால் எந்த பாதிப்பும் இல்லை. மற்ற தெருநாய்களுடன் சுற்றித்திரியும் போது இதுபோல் ஆக வாய்ப்பு உள்ளது என்றார்.

இதனிடையே கவுன்சிலர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, ” சென்னை மாநகராட்சி மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு நிதி பற்றாக்குறையால் சிறப்பு மேம்பாட்டு நிதி உயர்த்தப்படவில்லை. கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சத்தில் இருந்து தற்போது ரூ.45 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேயருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.3 கோடி நிதியும் 200 வார்டுகளின் வளர்ச்சிக்கு தான் செலவு செய்யப்பட உள்ளது என்றார். நேற்று கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் ராமலிங்கம், மண்டலக் குழு தலைவர் ராஜன் மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர் கார்த்திக், உள்ளிட்ட பெரும்பாலான கவுன்சிலர்கள், கவுன்சிலர் மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, இன்றைய கூட்டத்தில் பேசிய பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்களது வார்டு மேம்பாட்டு நிதியை உயர்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே, வார்டு மேம்பாட்டு நிதி ரூ.45 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றார். நேற்றைய கூட்டத்தில் 2024-25ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது கேமு

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *