Breaking News
Home / செய்திகள் / சென்னையில் இருந்து திருப்பதி போக பிளான் பண்றீங்களா.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பை உடனே பாருங்க

சென்னையில் இருந்து திருப்பதி போக பிளான் பண்றீங்களா.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பை உடனே பாருங்க

சென்னை: பெங்களூர்- ஜோலார்பேட்டை வழித்தடத்தில் பராமரிப்பு பணி மற்றும் என்ஜினீயரிங் வேலை நடைபெற இருப்பதால், சென்னை சென்டிரல் – திருப்பதி, பெங்களூர், மைசூர் ரயில் சேவைகள் குறிப்பிட்ட சில நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து ஏராளமான பெருமாள் பக்தர்கள் திருப்பதிக்கு ரயிலில் சென்று வருவது வழக்கம்.. அவர்கள் கீழ்கண்ட நாட்களில் திருப்பதி செல்வதாக இருந்தால் மாற்றிக்கொள்ளலாம். ஏனெனில் திருப்பதி செல்லும் ரயில்கள் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

பெங்களூரு – ஜோலார்பேட்டை வழித்தடத்தில் பராமரிப்பு பணி மற்றும் என்ஜினீயரிங் வேலை நடைபெற இருப்பதால் திருப்பதி எக்ஸ்பிரஸ் மற்றும் மைசூர் எக்ஸ்பிரஸ் , பெங்களூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: திருப்பதியிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16204) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16203) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மைசூரு செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் (16021) வரும் பிப்ரவரி 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, மைசூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் (16022) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, பெங்களூருவில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12658) வரும் பிப்ரவரி 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் வரும் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது” இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *