சென்னை: மிக்ஜாம் புயலால் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்த சூழலில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 29 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. மேலும் புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்துவிட்டதால் மழை படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவும் மிக்ஜாம் தீவிர புயல் தலைநகரை புரட்டிப் போட்டுள்ளது. இடைவிடாது பெய்த அதிகனமழையால் சென்னை மாநகரம் …
Read More »மிக்ஜாம் புயல் | கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி
சென்னை:மிக்ஜாம் புயல் காரணமாக, வரும் திங்கள்கிழமை (டிச.4) பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திங்கட்கிழமையன்று நடைபெறவிருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான, நேர்முகத்தேர்வு வரும் டிசம்பர் 6-ம் தேதி புதன்கிழமைக்கும், புதன்கிழமை டிச.6-ம் தேதியன்று நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வு வியாழக்கிழமைக்கும் (டிச.7) மாற்றியைமைக்கப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், அறிவிக்க எண் 34/2022-ல் அறிவித்தபடி கால்நடை உதவி மருத்துவர் …
Read More »மழை மீட்பு பணிகளில் ஒருங்கிணைந்து பணியாற்றும் சென்னை போலீஸார்: வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் உடனுக்குடன் தகவல் பரிமாற்றம்
சென்னை: மழை மீட்பு பணிகளில் மாநகராட்சி உள்பட பிற துறையினருடன் சென்னை காவல் துறையினர் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை கொட்டுகிறது. மீட்பு பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க சென்னை காவல் துறையின் பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் உள்ள 12 …
Read More »புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தொலைபேசி மூலம் ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கினார். வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல், இன்று தமிழக வடகடலோர மாவட்டங்களை நெருங்கிச்செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காற்று மற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை அதிகம் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு …
Read More »கூட்டுறவு, சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 35% உயர்வு: அமைச்சர் தகவல்
சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் 3,500 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் நீண்ட நாள் கோரிக்கையினை பரிசீலனை செய்து ஊதிய உயர்வு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சர்க்கரைத் துறை வேளாண் துறைக்கு …
Read More »வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; களப்பணியில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்
சென்னை: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை மெட்ரோ ரயில் அலுவலகத்தில், அந்நிறுவனத்தின் இயக்குநர்ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும்இயக்கம்) தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், அவர் தெரிவித்ததாவது: மழைக் காலத்தில் ஏற்படும் எந்தச் சூழலையும் சமாளிக்க சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செயல்படுகிறது. மழை நீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அங்கு மின் மோட்டார் மூலம்மழை நீரை வெளியேற்ற பல்வேறு திறன்களைக் …
Read More »சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான பிரதான தேர்வு தள்ளிவைப்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ( பணி நியமன தேர்வு ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் டிச.2 மற்றும் டிச. 3 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அன்றைய தினங்களில் சென்னையில் நடைபெற இருந்த மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான பிரதான தேர்வு டிச.9 மற்றும் டிச.10 ஆகிய தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே எந்தெந்த தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதோ …
Read More »“எல்ஐசி ஜீவன் உத்சவ்” புதிய திட்டம் அறிமுகம் – சிறப்பு அம்சம் என்ன?
சென்னை: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சார்பில் `எல்ஐசி ஜீவன் உத்சவ்’ எனும் புதிய திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எல்ஐசி ஜீவன் உத்சவ் என்பது ஒரு தனிநபர், சேமிப்பு, முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தில் 90 நாட்கள் முதல் 65 வயது உள்ளவர்கள் வரை பயன்பெறலாம். ஆயுள் முழுவதும் உறுதியளிக்கப்பட்ட வருமானம் மற்றும் ஆயுள் முழுவதும் காப்பீட்டு பாதுகாப்பு …
Read More »பால் கொள்முதல் விலை உயர்வு; முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை: பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சென்னை: தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம், தமிழக பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் இணையம், ஆவின் தொகுப்பு பால் குளிரூட்ட நிலைய சங்கப் பணியாளர்கள் நலச் சங்கம் மற்றும் நாம் தமிழர் மாநில தொழிற்சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன், சென்னையில் நேற்று முன்தினம் அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆலோசனை நடத்தினார். இதில், ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவை அதிகரிப்பது, பால் கொள்முதல் விலையை உயர்த்துவது, பால் உற்பத்தியாளர்களுக்கு …
Read More »முடங்கி கிடக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்.. தலைவர், செயலர் பதவி காலி.. அரசுக்கு முக்கிய கோரிக்கை!
சென்னை: முடங்கிக் கிடக்கும் டி.என்.பி.எஸ்.சியை மீட்டெடுத்து பணிகளை துரிதப்படுத்த, தலைவர், செயலர், உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்த உமா மகேஸ்வரி ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, வணிகவரித்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக டிஎன்பிஎஸ்சி செயலாளராக இருந்து வந்த உமாமகேஸ்வரி, திடீரென மாற்றப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி …
Read More »