சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ( பணி நியமன தேர்வு ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் டிச.2 மற்றும் டிச.
3 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அன்றைய தினங்களில் சென்னையில் நடைபெற இருந்த மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான பிரதான தேர்வு டிச.9 மற்றும் டிச.10 ஆகிய தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே எந்தெந்த தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதோ அதே மையங்களில் இந்த தேர்வு குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும், ஆனால் தேர்வர்களுக்கு புதிதாக தேர்வு நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.