சென்னை: தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், `தென்னை நார் கொள்கை’யை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போட்டிகளை உணர்த்தும், தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் …
Read More »தமிழக தொடக்க கல்வி துறையின்கீழ் உள்ள பள்ளிகளில் 1,500 ஆசிரியர்கள் நேரடி நியமனம்
சென்னை: தமிழக தொடக்க கல்வி துறையின்கீழ் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 1,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நியமனம் செய்ய அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக தொடக்க கல்வி துறையின்கீழ் 31,214 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 35 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, கரோனா பரவலுக்கு பிறகு, அரசுப் பள்ளிகளில் சுமார் …
Read More »டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்: அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
சென்னை: தென்மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் பாதிப்பை கருத்தில் கொண்டு டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஜனவரி 06, 07 ஆகிய நாட்களில் நடத்தவுள்ள பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டுமென விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். …
Read More »பொறியாளர் பணிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளிவைக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை: பொறியாளர் பணி தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தை (டிஎன்பிஎஸ்சி) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டிஎன்பிஎஸ்சியின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, ஜன.6, 7-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே தொடர்கனமழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு முற்றிலுமாக திரும்பவில்லை. இந்த மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் …
Read More »ஆவின், மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் காலிபணியிடங்களுக்கு முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வு
சென்னை: ஆவின், மின்சார வாரியம் உள்ளிட்ட தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள் முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட உள்ளன. இப்புதிய பணியிடங்கள் அடுத்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் வெவ்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு பதவியின் கல்வித்தகுதிக்கு ஏற்ப,குரூப்-1, குரூப்-2, குரூப்-2-ஏ,குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அடுத்த ஆண்டு என்னென்ன போட்டித் …
Read More »ஓட்டுநர் – நடத்துநர் பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைப்பு: உடனுக்குடன் முடிவுகளை அறிவிக்க தேர்வர்கள் வலியுறுத்தல்
சென்னை: விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பணிக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு இரண்டாம் கட்ட தேர்வுக்கான கடிதம் அனுப்பப்படுவதாக துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பதவிக்கான 685 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டு தகுதி பெற்றவர்களுக்கும், …
Read More »2 மாவட்டங்களில் நாளை யுஜிசி நெட் மறுதேர்வு!
சென்னை, நெல்லூர் மாவட்டங்களில் மட்டும் யுஜிசி நெட் மறுதேர்வு நாளை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆண்டுக்கு 2 முறை தேசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை ஆய்வு முனைவோருக்கான படிப்புகளுக்கு யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் யுஜிசி நெட் தேர்வு நடத்தப்பட்டு …
Read More »மிக்ஜாம் புயல் | கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி
சென்னை:மிக்ஜாம் புயல் காரணமாக, வரும் திங்கள்கிழமை (டிச.4) பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திங்கட்கிழமையன்று நடைபெறவிருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான, நேர்முகத்தேர்வு வரும் டிசம்பர் 6-ம் தேதி புதன்கிழமைக்கும், புதன்கிழமை டிச.6-ம் தேதியன்று நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வு வியாழக்கிழமைக்கும் (டிச.7) மாற்றியைமைக்கப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், அறிவிக்க எண் 34/2022-ல் அறிவித்தபடி கால்நடை உதவி மருத்துவர் …
Read More »சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான பிரதான தேர்வு தள்ளிவைப்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ( பணி நியமன தேர்வு ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் டிச.2 மற்றும் டிச. 3 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அன்றைய தினங்களில் சென்னையில் நடைபெற இருந்த மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான பிரதான தேர்வு டிச.9 மற்றும் டிச.10 ஆகிய தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே எந்தெந்த தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதோ …
Read More »முடங்கி கிடக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்.. தலைவர், செயலர் பதவி காலி.. அரசுக்கு முக்கிய கோரிக்கை!
சென்னை: முடங்கிக் கிடக்கும் டி.என்.பி.எஸ்.சியை மீட்டெடுத்து பணிகளை துரிதப்படுத்த, தலைவர், செயலர், உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்த உமா மகேஸ்வரி ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, வணிகவரித்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக டிஎன்பிஎஸ்சி செயலாளராக இருந்து வந்த உமாமகேஸ்வரி, திடீரென மாற்றப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி …
Read More »