மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் 1,933 காலிப்பணியிடங்கள் பிப்ரவரி 9 ம் தேதி முதல் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகளில் 1,933 காலிப்பணியிடங்கள் இருப்பதால் www.tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிர்வாகத் துறை அறிவித்துள்ளது.
Read More »மார்ச் 2024-ல் அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு : தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு
சென்னை : அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு மார்ச் 2024-ல் (for Semester System only) நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017-2019-ல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் …
Read More »தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீடு செய்கிறது ஸ்பெயினின் ‘ரோக்கா’ நிறுவனம்: 200 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்
சென்னை: ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளனர். அந்நாட்டின், ஆக்சியானா நிறுவனம் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவற்றில் முதலீடு செய்திட ஆர்வம் காட்டியிருக்கிறது. அதேபோல், ரூ.400 கோடி ரூபாய் முதலீட்டில் ரோக்கா நிறுவனம் பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவிடவும், ராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் உறுதியளித்திருப்பதாக தகவல் …
Read More »6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு ஜூன் 9-ம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை: கிராம நிர்வாக அலுவலகர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட சுமார் 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 போட்டித் தேர்வு வரும் ஜூன் 9-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி வலைதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி உள்ளது. இன்று (ஜன. 30, 2024) முதல் வரும் பிப்ரவரி 28-ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம் …
Read More »பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்: தமிழகத்தில் இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை: பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் தமிழகத்தில் இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்தார். பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், பாஜக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்களுடனான பயிற்சி முகாம் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடந்தது. பயிற்சி முகாமுக்கு திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் பிப்லாப் குமார் தெப், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், …
Read More »டிஎன்பிஎஸ்சி புள்ளியியல் பணி தேர்வு: உடனடியாக கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள புள்ளியியல் சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 5 மாதங்களாகியும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் கலந்தாய்வு நடத்தி பணி ஆணைகள் வழங்கப்படவில்லை. உடனடியாக கலந்தாய்வு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் …
Read More »கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: முதல்வருக்கு ஜாக்டோ – ஜியோ கடிதம்
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக முதல்வருக்கு ஜாக்டோ- ஜியோ கடிதம் எழுதியுள்ளது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை அறிவித்துள்ளனர். இதுகுறித்து கூட்டமைப்பு சார்பில் சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2011-ம் ஆண்டிலும், அதன்பின் 2016-ல் அதிமுக ஆட்சி தொடர்ந்த போதும் அரசு …
Read More »சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை: சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 245 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை எழுத்து தேர்வை (மெயின் தேர்வு) கடந்தாண்டு நவம்பர் 4, 5ம் தேதி நடத்தியது. இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிப்பில் …
Read More »ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியீடு: காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் தேர்வர்கள் அதிருப்தி
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையானது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழக கல்வித்துறைகளில் உள்ள பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள், வட்டாரக் கல்வி அதிகாரிகள் (பிஇஓ) உட்பட பணிகளில் ஏற்படும் காலியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பப்பட்டு வருகின்றன. அதனுடன் ஆசிரியர் தகுதித் …
Read More »சிவில் நீதிபதி பதவிக்கான முதன்மைத் தேர்வு: 472 வழக்கறிஞர்கள் தேர்ச்சி
சென்னை: தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் உள்ள உரிமையியல் (சிவில்) நீதிபதி பதவிகளில் உள்ள 245 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 1-ம் தேதி வெளியிட்டது. இந்த தேர்வெழுத மொத்தம்12,037 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இதையடுத்து முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெற்றது. இவற்றில் 2,544 பேர் அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.அவர்களுக்கான முதன்மைத் தேர்வு நவ. 4, 5-ம் தேதிகளில்நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. …
Read More »