Breaking News
Home / செய்திகள் (page 9)

செய்திகள்

“தகுதியை தக்க வைக்கவே எங்கள் சின்னத்தில் போட்டி” – வைகோ விளக்கம்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று விடுத்த அறிக்கை: கூட்டணி குறித்து மதிமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிடுவதும், விமர்சனங்களை முன்வைப்பதும் எனக்கு மன வேதனை அளிக்கிறது. தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளைக் காக்க தன்னலம் கருதாது பாடுபடும் கட்சி மதிமுக என்பதை உணர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பதிவு செய்யப்பட்ட கட்சி …

Read More »

மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை

சென்னை/ கோவை: மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழகம் வந்துள்ள துணை ராணுவ படையினரை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், முன்னதாகவே சட்டம் – ஒழுங்கு கண்காணிப்புக்காகவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும், துணை ராணுவ படையினரை மத்திய உள்துறை தமிழகத்துக்கு அனுப்புகிறது. முதல்கட்டமாக தமிழகத்துக்கு 25 கம்பெனியை சேர்ந்த துணை …

Read More »

திருமாவளவனுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு

சென்னை: விசிக தலைவர் திருமாவளவனை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சந்தித்தார். சென்னை, அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்துக்கு நேற்று வருகை தந்த செல்வப்பெருந்தகையை விசிக தலைவர் திருமாவளவன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தொடர்ந்து அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறும்போது, தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின் விசிக தலைவர் திருமாவளனை சந்தித்து வாழ்த்து பெற்றேன். வரும் …

Read More »

கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு

சென்னை: கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மின்வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில், கோடைகாலத்தின் போது தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சார விநியோகம் வழங்குவது குறித்து, தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் காணொலி வாயிலாக நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் கோடைகாலத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் …

Read More »

தேர்தல் தேதி அறிவித்த 2 மணி நேரத்துக்குள் அரசாணை பதிவேட்டை துறை செயலர்கள் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, எந்த புதிய திட்டத்துக்கான அரசாணையும் பிறப்பிக்க கூடாது. இதுதொடர்பான பதிவேட்டில், கடைசி அரசாணைக்கு கீழே கோடு வரைந்து, கையெழுத்திட்டு அதை புகைப்படம் எடுத்து 2 மணி நேரத்துக்குள் அனுப்ப வேண்டும் என்று அரசுத் துறைகளின் செயலர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் …

Read More »

சென்னை | தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனைக்குப் பின் புரளி என உறுதி

சென்னை: சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று சோதனைக்கு பின்பு தெரியவந்துள்ளது. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக செய்திச் சேனலை தொடர்பு கொண்ட நபர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தொலைக்காட்சி தரப்பில் இருந்து காவல் துறை கட்டுப்பட்டு அறைக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறை சார்பில் வெடிகுண்டு …

Read More »

அரசு தேர்வாணையங்களில் இடஒதுக்கீட்டை கண்காணிக்க சிறப்பு அதிகாரி: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அனைத்துத் தேர்வாணையங்களிலும் இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்க சமூகநீதியில் அக்கறை கொண்ட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் நீதித்துறைக்கு 245 சிவில் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் இடஒதுக்கீட்டு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது உறுதியானதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தயாரித்த தற்காலிகத் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து …

Read More »

மிக்ஜாம் புயல் நிவாரணம்: ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6,000 வரவு

சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்த ரூ.6,000 உதவித் தொகையைப் பெற விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000 வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு நேரடியாக பணம் விநியோகம் செய்யப்பட்டது. அதேநேரம் …

Read More »

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை பல்வேறு பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சரின் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள …

Read More »

பள்ளி வளர்ச்சி பணிகளுக்கான மத்திய அரசின் நிதி நிறுத்தம்: பள்ளிக்கல்வி துறைக்கு சிக்கல்

சென்னை: பள்ளிகள் வளர்ச்சிப் பணிகளுக்கான ரூ.1,045 கோடி நிதியுதவியை மத்திய அரசு திடீரென நிறுத்தியதால் தமிழகத்துக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வளர்ச்சி சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த நிதியை பெற மத்திய அரசின்விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற …

Read More »