சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று விடுத்த அறிக்கை: கூட்டணி குறித்து மதிமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிடுவதும், விமர்சனங்களை முன்வைப்பதும் எனக்கு மன வேதனை அளிக்கிறது. தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளைக் காக்க தன்னலம் கருதாது பாடுபடும் கட்சி மதிமுக என்பதை உணர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற தகுதியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே, எங்கள் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கேட்கிறோம்’’ என்றார்.
4 total views , 1 views today