Breaking News
Home / செய்திகள் (page 7)

செய்திகள்

வரும் கல்வியாண்டிலேயே அமலுக்கு வரும் அதிரடி திட்டம்… இனி பள்ளியிலேயே வங்கிக்கணக்கு தொடங்கலாம் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!

சென்னை: வரும் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே வங்கிக்கணக்கு தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். இப்பணியை செம்மைப்படுத்தும் விதமாக 2024-25ஆம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி மூலமாகவே வங்கிக் கணக்குகள் தொடங்கும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அப்போதே ஆதார் புதுப்பிக்கப்பட்டு வங்கிக்கணக்குடன் ஆதார் பதிவை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். பள்ளிப்படிப்பை முடித்து …

Read More »

அரசியல் சுயலாபத்திற்கு தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: அரசியல் சுயலாபத்திற்கு பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை தங்கசாலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று நலதிட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ஒன்றிய அரசு உரிய நிவாரணத்தை வழங்கவில்லை. நிவாரண நிதியாக தற்போது வரை சல்லி காசு …

Read More »

கூட்டணி கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு நிலவரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: கூட்டணி கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு நிலவரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். காங்கிரஸ், வி.சி.க., மதிமுக உடன் தொகுதிப் பங்கீடு இறுதியாகவுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Read More »

சென்னை ஐஐடியில் உச்சி மாநாடு தொடக்கம் | புதிய ஆராய்ச்சிகள் மூலம் வளர்ந்த நாடாக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கருத்து

சென்னை: புதிய ஆராய்ச்சிகள் மூலம் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தினார். தேசிய ஆராய்ச்சியாளர்கள் உச்சி மாநாடு சென்னை ஐஐடியில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கு சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி தலைமை வகித்தார். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் காணொலி காட்சி மூலம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது: நாட்டின் பொருளாதார மேம்பாடு, வளர்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள், …

Read More »

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.16 லட்சம் கோடி திட்டங்கள்: சென்னை கூட்டத்தில் எல்.முருகன், அண்ணாமலை உரை

சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் தமிழக வளர்ச்சிக்காக ரூ.16 லட்சம் கோடிதிட்டங்களை கொண்டு வந்திருப்பதாகவும் இந்திய அரசியலை மாற்றியவர் என்றும் பிரதமர் மோடி குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோர் தெரிவித்தனர். நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்ற பாஜகபொதுக்கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ, அப்போதெல்லாம் தமிழகத்துக்கான புதிய திட்டங்களையும் சேர்த்து கொண்டு வருகிறார். …

Read More »

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் தேசிய பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு

சென்னை: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில், பணியிட பாதுகாப்பு தொடர்பான தேசிய பாதுகாப்பு தின உறுதிமொழி நேற்று ஏற்கப்பட்டது. தொழிற்சாலைகளில் பணியிடப் பாதுகாப்பை ஏற்படுத்தவும், தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும், விபத்துகளைத் தடுக்கும் நோக்கிலும் 53-வது தேசிய பாதுகாப்பு தினம் சென்னையில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு, ‘பாதுகாப்புத் தலைமையை மையப்படுத்தி சுற்றுச்சூழல் சமூக நிர்வாகத்தில் சிறப்படைவோம்’ என்ற கருப்பொருளைக் …

Read More »

தண்டனையை எதிர்த்து பொன்முடி மேல்முறையீடு..! உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அவ்வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது. இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக …

Read More »

கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்குரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய – மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த …

Read More »

சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்களின் பராமரிப்புப் பணிகளுக்கான ஆணைகள், உபகரணங்களை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள பூங்காக்களின் பராமரிப்புப் பணிகளுக்கான ஆணைகள் மற்றும் உபகரணங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரின் தலைமையின் கீழ் தமிழ்நாடு …

Read More »

சென்னை காவல் துறை சார்பில் சைபர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசு

சென்னை: சென்னை காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு சைபர் செல் மற்றும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி சார்பில் மாணவர்களுக்கான ‘சைபர் ஹேக்கத்தான் – 2024’ போட்டி நடைபெற்றது. அதிக அளவில் நிகழும் சைபர் குற்றங்கள் தொடர்பான 6 தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் பங்கேற்க மொத்தம் 262 அணிகள் பதிவு செய்திருந்தன. அதில் 179 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. முதல் சுற்று போட்டியில் 20 அணிகள் வெற்றி பெற்று இறுதி …

Read More »