சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அவ்வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது. இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்காக நீதிபதிகள் முன்னிலையில் வந்தது.
அப்போது, தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். தொடர்ந்து, வழக்கு தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் தீர்ப்பு விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு விசாரணையை மார்ச் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.