சென்னை: உள்ளாட்சி பொறியாளர்கள் நியமனத்தில் ஊழலுக்கு வழிவகுக்காமல், டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 1933 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட வேண்டிய ஆள்தேர்வை நகராட்சி நிர்வாகத் துறை நேரடியாக நடத்தத் துடிப்பதன் பின்னணியில் …
Read More »அதிமுகவும் பாஜகவும் அவதூறு பரப்பி எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது: முதல்வர் ஸ்டாலின் உறுதி
சென்னை: அவதூறுகளைப் பரப்புவதில் பாஜகவும், அதிமுகவும் சளைத்தவையல்ல என்றும் பாஜக எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என்றும் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டில் இருக்கிறேன். அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பதே, கருணாநிதி வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களில் முதலானது. அதனை முன்னெடுத்து, அயாராது உழைத்து, வரும் …
Read More »மேகேதாட்டு அணை கட்டுமான வரைவுக்கு ஒப்புதல்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், மேகேதாட்டு அணை கட்டுமான வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர, தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: டெல்லியில் கடந்த 1-ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகேதாட்டு அணை கட்டுமான வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்துக்கு செய்யப்படும் துரோகமாகும். தமிழகத்துக்கு …
Read More »வெளி சந்தையில் அரிசி விலை உயர்ந்தாலும் ரேசன் கடைகளில் போதிய அளவு அரிசி இருப்பு உள்ளது: அமைச்சர் பெரியகருப்பன்
சென்னை: வெளிச்சந்தையில் அரிசி விலை உயர்வால் ரேசன் கடைகளில் தட்டுப்பாடு ஏற்படாது. போதிய அளவில் அரிசி இருப்பு உள்ளது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். கூட்டுறவுத் துறையில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி மறைந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு தகுதியான 26 பேருக்கு பணிநியமனை ஆணைகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டுறவு சங்கங்களின் வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவுத் …
Read More »18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: காலமுறை ஊதியம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கிராம ஊராட்சி பணியாளர்களின் கேப்ஸ் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கேப்ஸ் சார்பில் பெருந்திரள் முறையீடு இயக்கம் நேற்று சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் நடைபெற்றது. இதற்கு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் …
Read More »பிப்.7-ல் தேமுதிக மாவட்ட செயலர்கள் ஆலோசனை
சென்னை: மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைமையகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் வரும் 7-ம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
Read More »விதிமீறல்களில் ஈடுபட்டதாக 219 மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமம் ரத்து
சென்னை: தமிழகத்தில் விதிமீறல்களில் ஈடுபட்ட 219 மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 9 மாதங்களில் விதிமீறல்களில் ஈடுபட்ட 219 மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை …
Read More »விண்ணை முட்டும் அரிசி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை தேவை: ராமதாஸ்
சென்னை: அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ‘தமிழகத்தில் சாப்பாட்டுக்கான சன்னரக அரிசி விலை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ. 6 வரை உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் நெல்லுக்கு கடுமையான தட்டுப் பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு மேலும் ரூ.12 வரை உயர்வதற்கு …
Read More »ஏழைகளை வஞ்சித்து, கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல்: கி.வீரமணி கண்டனம்
சென்னை: ஏழைகளை வஞ்சித்து, கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் சாதி பற்றி குறிப்பிடுவது பாஜகவின் வருணாசிரம கொள்கையை பிரதிபலிக்கிறது. மக்களிடையே மாற்றம் ஏற்படுவதற்கு பதிலாக ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. அனைவருக்கும் அனைத்தும் தருவதாக பட்ஜெட் அமைவதே, மக்கள் நல ஆட்சிக்கான சான்றாகும். நம்பிக்கை, வளர்ச்சி, பொருளாதாரத்தில் முன்னேறி, மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பட்ஜெட் …
Read More »“பாஜக அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்துகிறது” – விசிக மா.செ. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
சென்னை: சென்னை அசோக் நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு; # 26.1. 2024 அன்று திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற வெல்லும் சனநாயகம் மாநாட்டில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்று தமிழ்நாட்டு …
Read More »