சென்னை: ஏழைகளை வஞ்சித்து, கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் சாதி பற்றி குறிப்பிடுவது பாஜகவின் வருணாசிரம கொள்கையை பிரதிபலிக்கிறது. மக்களிடையே மாற்றம் ஏற்படுவதற்கு பதிலாக ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. அனைவருக்கும் அனைத்தும் தருவதாக பட்ஜெட் அமைவதே, மக்கள் நல ஆட்சிக்கான சான்றாகும். நம்பிக்கை, வளர்ச்சி, பொருளாதாரத்தில் முன்னேறி, மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும்.
மாதங்கள் பல உருண்டோடியும் தமிழ்நாட்டுக்கு மழை வெள்ள நிவாரண நிதி ஏதும் வந்தபாடில்லை. கச்சா எண்ணெய் குறைந்தபோதும் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பு ஏன் வரவில்லை? என்று கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ முறை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேடு மேடாகி வருகிறது; பள்ளம் பள்ளமாகிக் கொண்டே உள்ளது: இதுவே, பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனை எனவும் திராவிட கழக தலைவர் கி.வீரமணி சாடியுள்ளார்.