சென்னை: மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைமையகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் வரும் 7-ம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.