Breaking News
Home / செய்திகள் (page 12)

செய்திகள்

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: சேலம் பெரியார் பல்கலை. பதிவாளரை சஸ்பெண்ட் செய்யாவிடில் துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், உயர்கல்வித்துறை 2 முறை கடிதம் எழுதியும் பதிவாளர் தங்கவேலுவை துணைவேந்தர் சஸ்பெண்ட் செய்யவில்லை. சென்னை பல்கலை.யில் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Read More »

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உடல்நல பாதிப்பால் உயிரிழப்பு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (பிப்.28) காலை காலமானார். கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்தார். இதனை மருத்துவமனை நிர்வாகம் உறுதி …

Read More »

திமுக – காங். கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை: ஆனந்த் சீனிவாசன் உறுதி

சென்னை: திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் ஊடகம் மற்றும் தகவல் தொடர் பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர் பிரிவு தலைவராக, பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் அஜோய் குமார் அறிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த ஆனந்த் சீனிவாசன் பங்கு சந்தை, நாட்டின் பொருளாதாரம், நிதி …

Read More »

மாநகராட்சி சார்பில் மார்ச் 3ம் தேதி சென்னையில் 1,646 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: ஏற்பாடுகள் தீவிரம், ஆணையர் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மார்ச் 3ம் தேதி நடைபெறவுள்ள தீவிர கூடுதல் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில், காணொலி காட்சி மூலம் ரிப்பன் மாளிகை வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், கூடுதல் ஆணையர் ஜெயசந்திர பானு ரெட்டி, நிலைக்குழு தலைவர் சாந்தகுமாரி, மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ …

Read More »

ரூ.8,802 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் புதிய துணை மின் நிலையங்கள், வெள்ளத் தடுப்பு பணிகள், குடியிருப்புகள், அரசு அலுவலக கட்டிடங்கள், கிடங்குகள், நெல் கொள்முதல் நிலையங்கள் உட்பட ரூ.8,802 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.1,615.29 கோடியில் தூர்வாரும் பணிகள், நெல் சேமிப்பு தளங்கள் உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் …

Read More »

“வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திடுக” – தினகரன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும் – மக்கள் நலப்பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்துகிறேன். காலிப்பணியிடங்களை …

Read More »

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை என பாஜக அரசின் எந்த அணிகள் வந்தாலும் அஞ்சமாட்டோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை என பாஜக அரசின் எந்த அணிகள் வந்தாலும் அஞ்சமாட்டோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் நடைபெற்றது. நலிவுற்ற ஆதிதிராவிடர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்; ஆதி திராவிடர் சமூகத்திற்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜாதி கொடுமைகளுக்கு எதிராக போராடியவர்தான் கலைஞர்; …

Read More »

பணி காலத்தில் இறந்த மருத்துவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை: மா.சுப்ரமணியன்

சென்னை: சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தில், அரசு மருத்துவர்களின் பங்களிப்புடன் கூடிய சேமநல நிதி ரூ.7 கோடியினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்கிழமை 7 குடும்பங்களுக்கு வழங்கினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது, “தமிழக அரசுப்பணிகளில் பணிபுரிந்து வருகின்ற மருத்துவர்கள், எதிர்பாராத வகையில் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களைச் சார்ந்த வாரிசுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கிட மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு நிதி 2020ஆம் ஆண்டு …

Read More »

கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டம்: விளைவுகளை அடுக்கும் அன்புமணி

சென்னை: “சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகத்தில் குப்பையை எரித்து மின்னுற்பத்தி செய்யும் எரிஉலை (Incinerator) திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது. சுற்றுச் சூழலில் தொடங்கி மனித உயிர்கள் வரை பல்வேறு வகையானக் கேடுகளை குப்பை எரிஉலைத் திட்டம் ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்திருந்தும் அதை செயல்படுத்த மாநகராட்சி துடிப்பது கண்டிக்கத்தக்கது.” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை கொடுங்கையூரில் 342 ஏக்கரில் …

Read More »

வங்கிகள், தபால் நிலையங்கள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு: தேர்தல் ஆணையம் ஏற்பாடு

சென்னை: வரும் மக்களவை தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, வங்கிகள், தபால் நிலையங்களில் வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மற்றும் தபால் துறை (டிஓபி) ஆகிய இரண்டு முக்கிய அமைப்புகளுடன் தேர்தல் ஆணையம் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டது. தேர்தல் தொடர்பான கல்வியறிவை பெற ஏதுவாக பள்ளிகள் மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் அவற்றை …

Read More »