Breaking News
Home / செய்திகள் (page 90)

செய்திகள்

தொடர்மழை எதிரொலியால் விநியோகம் பாதிப்பு: சென்னையில் பால் கிடைக்காமல் மக்கள் அவதி

சென்னை: தொடர்மழை காரணமாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் அத்தியாவசிய தேவையான ஆவின்பால் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டனர். மேலும், சில இடங்களில் அதிக விலைக்கு பழைய பால் பாக்கெட்டுகளை வாங்கி செல்லும் நிலையும் ஏற்பட்டது. `மிக்ஜாம்’ புயல் காரணமாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் 3 அடி வரை மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் வடியாத நிலையில், பல இடங்களில் போக்குவரத்து முடங்கி, வாகன …

Read More »

‘மிக்ஜாம்’ புயல் சேதங்களை சீர்செய்திட ரூ.5,060 கோடி இடைக்கால நிவாரணம் தேவை: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, பிரதமரை நேரில் சந்தித்து வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், ”தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் …

Read More »

சென்னை வெள்ளம் | பயணிகளுக்கு கைகொடுத்த மெட்ரோ ரயில் சேவை

சென்னை: `மிக்ஜாம்’ புயல் காரணமாக, சென்னையில் பல்வேறு இடங்களில் ரயில், பேருந்து சேவை பாதிக்கப்பட்ட நிலையில், மெட்ரோ ரயில்கள்எவ்வித பாதிப்புமின்றி வழக்கம்போல இயங்கின, இதனால், பயணிகள் நிம்மதியாக பயணித்தனர்.குறிப்பாக, அத்தியாவசியப் பணிக்கு சென்றவர்களுக்கு மெட்ரோ ரயில் சேவை பேருதவியாக இருந்தது. புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3-ம் தேதி இரவு முதல் நேற்று முன்தினம் இரவு வரை காற்றுடன் தொடர் மழை பெய்தது. இதனால், சாலைகளிலும் ஆங்காங்கே …

Read More »

சென்னை | மழை வெள்ளத்தால் பாதிப்பு பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை: சென்னை ராயபுரத்தில் பல பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால், உணவு, தண்ணீர், மின்சாரம் இல்லாமல் கடந்த 3 நாட்களாக தவித்து வருவதாக, ராயபுரம் மக்கள் நேற்று டிஎச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உணவு பொட்டலங்களை சாலையில் கொட்டி கோஷங்களை எழுப்பினர். இதனால், சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதி எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மக்கள், …

Read More »

புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடக்கம்

சென்னை: புறநகர் மின் ரயில் சேவையில் சென்னை – தாம்பரம் வழித் தடத்தில் அரை மணி நேரத்துக்கு ஒருரயில் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக, சென்னையில் பல இடங்களில் ரயில் தண்டவாளம் மழை நீரில் மூழ்கியது. மழைநீர் தேங்கிய பகுதியில் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், புறநகர் மின்சார ரயில் சேவை நேற்று பிற்பகலில் இருந்து இயங்கத் தொடங்கியது. சென்னை எழும்பூர் – …

Read More »

அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை 12-வது முறையாக நீட்டிப்பு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை 12-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தஜூன் 14-ம் தேதி கைது செய்து, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையினர் கடந்த ஆக.12-ல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததது. இதையடுத்து …

Read More »

திட்டமிட்டு செயல்படாததே இன்னலுக்கு காரணம்: பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் தியாகராய நகர், விருகம்பாக்கம், பெருங்குடி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்புக்குள்ளான இடங்களை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று பார்வையிட்டார். அவர், அங்குள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் புயல் குறித்த முன்னெச்சரிக்கை கூட்டங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்டன. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே மண்டலந்தோறும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். அவர்களுடன் ஆலோசனை …

Read More »

அடுக்குமாடி கட்டிடத்துக்கு தோண்டப்பட்ட பள்ளத்தால் கிண்டி காஸ் நிலைய அலுவலகத்தில் மண்சரிவு: 2 ஊழியர்கள் மாயம்

சென்னை: சென்னையில் அடுக்குமாடி கட்டிடத்துக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் தொடர் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது. இதனால், அருகில் இருந்த காஸ் நிலைய அலுவலகம் சரிந்து நீரில் மூழ்கியது. இதில், 2 ஊழியர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், மாயமான மேலும் 2 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னை கிண்டி, 5 பர்லாங் சாலை – வேளச்சேரி சாலை இணைப்பில் வாகனங்களுக்கான காஸ் நிலையம் உள்ளது. இதன் அருகே 7 அடுக்கு மாடி …

Read More »

விலகிய மிக்ஜாம்: 2 நாட்களுக்குப் பிறகு சென்னையில் தலைகாட்டிய சூரியன்

சென்னை: வங்கக் கடலில் நிலவிய மிக்ஜாம் தீவிர புயல் தாக்கம் குறைந்ததையொட்டி சென்னையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம் புயல் நேற்று முன்தினம் மாலை வட தமிழக கரையை சுமார் 250 கி.மீ. தொலைவில் நெருங்கிய போது, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவற்றில் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. புயல் மேலும் நெருங்கிய …

Read More »

சென்னையில் நேற்று மாலை நேரத்துக்குப் பிறகு மாநகர பேருந்துகள் முற்றிலும் நிறுத்தம்

சென்னை: சென்னையில் நேற்று மாலை நேரத்துக்குப் பிறகு மாநகர பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. சென்னையில் கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான இடத்தில் மழைநீர் தேங்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓட்டுநர், நடத்துநர்கள் அதிகாலையில் பணிமனைக்கும், இரவு பணி முடித்தவர்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாத நிலை இருந்தது. அதே நேரம், 4 மாவட்டங்களில் பொதுவிடுமுறை விடப்பட்டதால் பேருந்து நிலையங்கள், நிறுத்தங் களிலும் மக்கள் கூட்டம் இல்லை. எனவே, நேற்று காலை முதல் மாலை …

Read More »