சென்னை: சென்னையில் சென்ட்ரல், எழும்பூரை அடுத்து தாம்பரத்தை 3வது ரயில் முனையம் அமைக்க மேம்படுத்தி வருகிறது. அதேபோல் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை 4வது முனையமாக தெற்கு ரயில்வே மேம்படுத்த உள்ளது. தேவையான நிலம் இருப்பதால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக உள்ள சென்னை மாநகரம், நகர்புறம் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்த்தால் 2 கோடிக்கு மேல் மக்கள் தொகை இருக்கும். தினமும் 2 …
Read More »மேற்கூரையில் சோலார் அமைத்தால்.. 300 யூனிட் மின்சாரம் இலவசம்.. மத்திய அரசின் திட்டம்..
சென்னை: வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்று நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் தொடர்பாக இங்கே விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. நேற்று புதிய நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். 55 நிமிடம் அவர் பட்ஜெட் உரையில் பேசினார். இடைக்கால பட்ஜெட் என்பதால் …
Read More »தமிழக வெற்றி கழகம்: நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு
சென்னை: டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றிருக்கும் நிலையில், தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறார் என கூறப்படும் சூழலில், அவரது மக்கள் இயக்கத்தினர் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அண்மையில் பெருமழை …
Read More »தமிழகத்தின் அனைத்து சதுப்பு நிலங்களையும் பாதுகாக்கவும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்துன் அனைத்து சதுப்பு நிலங்களையும் முழுமையாக பாதுகாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று உலக சதுப்பு நில நாள் ( #WorldWetlandsDay ). நீரும் நிலமும் சேருகின்ற இடங்கள் அனைத்தும் சதுப்பு நிலங்களே ஆகும். குளம், குட்டை, ஏரி, கழிமுகம், முகத்துவாரம், சதுப்பளம், கடலோர சதுப்பு நிலக் காடுகள், காயல் உள்ளிட்ட தமிழகத்தின் …
Read More »“வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட மறுப்பதா?” – திமுக அரசைக் கண்டித்து இபிஎஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
சென்னை: வெள்ளாற்றின் குறுக்கே பு. ஆதிவராகநல்லூரில் தடுப்பணை கட்ட மறுக்கும் பொம்மை முதல்வருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், கடலூர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சேலம் மாவட்டம், கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் வெள்ளாறு பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பயணித்து கூடலையாத்தூரில் மணிமுக்தா நதியுடன் இணைந்து பரங்கிப்பேட்டை அருகில் …
Read More »ஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்
சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, ஏற்கெனவே, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை சமீபத்தில், காணொலி வாயிலாக வழங்கியுள்ளது. தொடர்ந்து, தற்போது உதவிதேர்தல் …
Read More »தேசிய கல்விக் கொள்கை – நீட் – இந்தி மொழித் திணிப்பு போன்ற பாஜகவின் பாசிச அடக்குமுறைகளை முறியடிப்போம் : அமைச்சர் உதயநிதி
சென்னை : தேசிய கல்விக் கொள்கை – நீட் – இட ஒதுக்கீடு பறிப்பு- இந்தி மொழித் திணிப்பு போன்ற பாஜகவின் பாசிச அடக்குமுறைகளை முறியடிப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்திய ஒன்றிய மாணவர்களின் உரிமைகளை காக்க, தி.மு.கழகம் – இடதுசாரி – சிறுபான்மையினர் இயக்கங்கள் உள்ளிட்டவற்றின் மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து ‘யுனைடெட் ஸ்டுடென்ட்ஸ் ஆஃப் இந்தியா’ எனும் …
Read More »புதிய மின் இணைப்புகளுக்காக 30 லட்சம் மீட்டர் வாங்க மின்வாரியம் டெண்டர்
சென்னை: புதிய மின் இணைப்புகளுக் காக 30 லட்சம் மின் மீட்டர்கள் வாங்க மின்வாரியம் டெண்டர் கோரியுள்ளது. மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க காலதாமதம் ஏற்படுவது, மின்பயன்பாட்டைக் குறைத்து கணக்கெடுப்பது போன்ற முறைகேடுகளால் மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைசெயல்படுத்த மின்வாரியம் முடிவு செய்து, ஆளில்லாமல்தொலைத் தொடர்பு வசதியுடன்,தானாகவே கணக்கெடுக்கும்ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டது. இதற்காக, மாநிலம் முழுவதும் ரூ.3.03 கோடி இணைப்புகளில் ஸ்மார்ட் …
Read More »பணி நிரந்தரம், ஓய்வூதியம் கோரி சென்னையில் மக்கள்நலப் பணியாளர்கள் போராட்டம்
சென்னை: பணி நிரந்தரம், ஒய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள்நலப் பணியாளர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மக்கள்நலப் பணியாளர்கள் சங்கம் சார்பில், பணி நிரந்தரம், பணியின் போது இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று நடைபெற்றது. இதில் அமைப்பின் தலைவர் செல்லப்பாண்டியன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலமுறை ஊதியம்: இதுகுறித்து …
Read More »40 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறையின் கலைத் திருவிழா போட்டிகள்: வெற்றி பெற்ற 1,418 பேருக்கு பரிசுகள்
சென்னை: மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 1,418 மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டுப்புற இசை, நடனம், நாடகம், ஓவியம், சிற்பம் உட்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தி அதில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்தாண்டுக்கான …
Read More »