சென்னை: வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்று நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் தொடர்பாக இங்கே விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
நேற்று புதிய நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். 55 நிமிடம் அவர் பட்ஜெட் உரையில் பேசினார். இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அறிவிப்புகள் வெளியாகவில்லை.
உதாரணமாக மோடி பிரதமரான பின்னர் 600 பில்லியன் டாலர் அளவுக்கு நேரடி அந்நிய முதலீடு வந்துள்ளது; இடைக்கால பட்ஜெட்டின் மொத்த வருவாய் 30.8 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பு. அதில் நிதிப் பற்றாக்குறை 5.8%; நாட்டின் மொத்த கடன் 14லட்சம் கோடியாக உள்ளது;
முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3000 ஐ.டி.ஐக்கள் தொடங்கப்பட்டுள்ளன.
சோலார் அறிவிப்பு: இதில்தான் வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்று நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் தொடர்பாக இங்கே விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
1. உங்கள் வீடுகளில் தனியார் அல்லது அரசின் உதவியுடன் மேற்கூரையில் சோலார் அமைக்க வேண்டும்.
2. பொதுவாக மேற்கூரையில் சோலார் அமைக்க சதுர அடி பொறுத்து 50 ஆயிரம் முதல் 2-3 லட்சம் வரை செலவு ஆகும்.
3. மேற்கூரையில் சோலார் அமைத்தால் வீட்டில் பெரும்பாலும் மின்சார தேவை பூர்த்தி ஆகிவிடும். மழை காலம், பனி காலத்தில் 1-2 மணி நேர மின்சார நிலையத்தின் மின்சார சப்ளை தேவை மட்டும் இருக்கும்.
4. நீங்கள் மேற்கூரையில் சோலார் வைத்துள்ளதை அரசிடம் பதிவு செய்ய வேண்டும்.
5. அப்படி செய்திருக்கும் பட்சத்தில் அந்த குறைந்த பட்ச மின்சார தேவையை அரசே ஏற்றுக்கொள்ளும் திட்டம்தான் இது.
6. பொதுவாக மேற்கூரையில் சோலார் இருந்தால்.. மாதம் உங்களுக்கு மின்சார வாரியத்தின் மின்சாரத்தில் 100 யூனிட் கூட அவசியம் இருக்காது. இருந்தாலும் நீங்கள் 300 யூனிட் வரை இலவசமாக பயன்படுத்த முடியும்.
7. மேற்கூரையில் சோலார் அமைப்பதை ஊக்குவிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மற்ற அறிவிப்புகள்: நேற்று பட்ஜெட்டில் 9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள்.
நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும். 517 நகரங்களில் சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும்; 1000 விமானங்கள் புதிதாக வாங்கப்படும்
40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலின் தரத்திற்கு உயர்த்தப்படும். மேலும் சில நகரங்களுக்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும். இதனால் மக்களின் பயணம் எளிதாகும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்தியாவில் இவி வாகனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் நிதி அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஊழல் எதிர்ப்புக்கும், வாரிசு அரசியலுக்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. பாஜகவுக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என நம்பிக்கை உள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தபோது ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். தற்போது நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. மகளிர் இட ஒதுக்கீடு, முத்தாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது
வருமான வரி விதிக்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை. நிறுவனங்களுக்கான வரி 22% மாக குறக்கப்பட்டுள்ளது. கூடுதலாக செலுத்திய வரியை திரும்ப பெறுவதற்கான கால அளவு 2013ல் 94 நாட்களாக இருந்தது. தற்போது 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.