Breaking News
Home / செய்திகள் / தேசிய கல்விக் கொள்கை – நீட் – இந்தி மொழித் திணிப்பு போன்ற பாஜகவின் பாசிச அடக்குமுறைகளை முறியடிப்போம் : அமைச்சர் உதயநிதி

தேசிய கல்விக் கொள்கை – நீட் – இந்தி மொழித் திணிப்பு போன்ற பாஜகவின் பாசிச அடக்குமுறைகளை முறியடிப்போம் : அமைச்சர் உதயநிதி

சென்னை : தேசிய கல்விக் கொள்கை – நீட் – இட ஒதுக்கீடு பறிப்பு- இந்தி மொழித் திணிப்பு போன்ற பாஜகவின் பாசிச அடக்குமுறைகளை முறியடிப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்திய ஒன்றிய மாணவர்களின் உரிமைகளை காக்க, தி.மு.கழகம் – இடதுசாரி – சிறுபான்மையினர் இயக்கங்கள் உள்ளிட்டவற்றின் மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து ‘யுனைடெட் ஸ்டுடென்ட்ஸ் ஆஃப் இந்தியா’ எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டமைப்பு சார்பில், தேசியக் கல்விக் கொள்கை & நீட் தேர்வுக்கு எதிராகவும், பாசிச பாஜகவை மக்களவைத் தேர்தலில் வீழ்த்தவும், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட “சென்னைப் பேரணி”யை, கழகம் தொடங்கப்பட்ட ராயபுரத்தில் இந்திய மூவர்ணக் கொடியை அசைத்து இன்று தொடங்கி வைத்தோம்.தேசிய கல்விக் கொள்கை – நீட் – இட ஒதுக்கீடு பறிப்பு- இந்தி மொழித் திணிப்பு போன்ற பாஜகவின் பாசிச அடக்குமுறைகளை முறியடிப்போம். INDIA கூட்டணியை வெல்லச் செய்வோம் என மாணவர்கள் மத்தியில் உரையாற்றினோம்.என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *