சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மையங்களில் 2 – 6 வயது குழந்தைகளுக்கான உணவூட்டு செலவு தொகையை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தின்கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2- 6 வயது குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டு செலவின தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் …
Read More »தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை மாயம்: கோட்டை காவல் நிலையத்தில் புகார்
சென்னை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவின் அடையாள அட்டை காணாமல் போனதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரியான சத்யபிரத சாஹுவின் அடையாள அட்டை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
Read More »தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெறப்பட்ட தொழில் முதலீட்டு விவரங்களை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்
சென்னை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்த 14 மாதங்களில் மட்டும் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் கிடைத்துள்ளதாக ஸ்டாலின் கூறினார். கடந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக, 9 நாட்கள் சிங்கப்பூர் – ஜப்பான் சென்ற முதல்வர் ஸ்டாலின், முதலில் ரூ.1,258 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தார். பின்னர் ரூ.3,233 கோடி என்று அதிகரித்து புள்ளி விவரங்கள் …
Read More »தூய்மைப் பணியாளர்கள் சரிவர பணியாற்றாததால் சென்னையில் பல வார்டுகளில் குப்பை தேக்கம்: மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
சென்னை: தூய்மைப் பணியாளர்கள் சரிவரபணியாற்றாததால் பல வார்டுகளில் குப்பை தேங்கியுள்ளதாக மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரி வித்துள்ளனர். சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணைமேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 35-வது வார்டு மதிமுக கவுன்சிலர் ஜீவன் பேசியதாவது: சென்னையில் 2023-ல் புயல்,பெருமழை என 2 நாட்களில் 58செமீ மழை பெய்துள்ளது. உயிர்ச்சேதம் குறைவு. 72 மணி நேரத்திலேயே …
Read More »கிண்டி அரசு மருத்துவமனையில் ரூ.30 கோடி செலவில் 70 குளிர்பதன தனி அறைகள், 50 படுக்கைகளுடன் ஐசியூ: அமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.30.5 கோடி மதிப்பீட்டில் அதிநவீன உபகரணங்களுடன் 10 உயர் சிறப்பு அறுவை சிகிச்சை அரங்கம், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 70 குளிரூட்டப்பட்ட தனி அறைகள் ஆகியவற்றை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் …
Read More »போலி பாஸ்போர்ட் விவகாரம் | டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிராக ஆதாரமில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
சென்னை: மதுரையில் போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு எதிராக எந்த ஆதாரமுமில்லை என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வாராகி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “மதுரை மாநகர போலீஸ் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்த காலகட்டத்தில் அவருடைய மனைவி நடத்திய டிராவல் ஏஜென்சி மூலமாக 200-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் …
Read More »திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு: உதயநிதியுடன் அறிமுக நிகழ்வாக மாறும் ஆலோசனை கூட்டம்
சென்னை: திமுக தேர்தல் பணிக்குழு நடத்தும் மாவட்ட வாரியான ஆலோசனை கூட்டமானது, அமைச்சர் உதயநிதியை அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கும் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வாகவும் மாறி வருகிறது. வாரிசு அரசியல் கட்சி என்று திமுக மீது விமர்சனங்கள் தொடர்ந்தாலும்,அவற்றை கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த கட்சி நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலினை கட்சியினர் ஏற்றுக்கொண்டதைப்போல், அவரது மகன் உதயநிதிக்கும் கட்சியில் உரிய முக்கியத்துவம் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இதில், சீனியர் முதல் ஜூனியர் வரை யாரும் …
Read More »திமுக ஒதுக்கும் ‘சீட்’, மம்தாவின் ‘தவறு’, நிதிஷால் பாஜகவுக்கு பலவீனம்… – கே.எஸ்.அழகிரி நேர்காணல்
மக்களவைத் தேர்தல் 2024 களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார். இந்தமுறை மக்களவைத் தேர்தலில் திமுகவிடம் காங்கிரஸ் எத்தனை தொகுதிகள் கேட்டுள்ளது? “பேச்சுவார்த்தை என்பது எங்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தான். அது குறித்து வெளிப்படையாக பேச முடியாது.” ஆனால், …
Read More »மார்ச் 2024-ல் அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு : தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு
சென்னை : அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு மார்ச் 2024-ல் (for Semester System only) நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017-2019-ல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் …
Read More »தமிழகத்தில் குடியுரிமை சட்டம் அமலாவதை அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமலாவதை அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ., வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஒருவர்.இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம் ஆனதற்கு முழு முதற் காரணமே பார்லி.,யில் அ.தி.மு.க ஆதரித்து ஓட்டளித்ததுதான். அப்போது …
Read More »