Breaking News
Home / செய்திகள் / தமிழகத்தில் குடியுரிமை சட்டம் அமலாவதை அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் குடியுரிமை சட்டம் அமலாவதை அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் குடியுரிமை சட்டம் அமலாவதை அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்


சென்னை: தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமலாவதை அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ., வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஒருவர்.இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம் ஆனதற்கு முழு முதற் காரணமே பார்லி.,யில் அ.தி.மு.க ஆதரித்து ஓட்டளித்ததுதான்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது திமுக. 2021ல் ஆட்சிக்கு வந்த உடனே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டசபையில் தீர்மானமே நிறைவேற்றினோம். தமிழகத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ., அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

உறுதியாகச் சொல்கிறேன். தமிழகத்துக்குள் குடியுரிமை சட்டத்தை கால்வைக்க விட மாட்டோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *