Breaking News
Home / செய்திகள் (page 30)

செய்திகள்

ஸ்பெயின் பயணம் நிறைவு – நாளை சென்னை திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்!

ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை நோக்கி தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 27ம் தேதி ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டார். முதலமைச்சருடன் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் சென்றிருந்தார். ஆகையால், ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தியதுடன், பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக …

Read More »

அடுத்துவரும் 75 நாட்களுக்கு உழைப்பை இரட்டிப்பாக்க வேண்டும்: பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

சென்னை: மக்களவைத் தேர்தலுக்காக அடுத்த 75 நாட்களுக்கு இரட்டிப்பாக உழைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை, அமைந்தகரையில் தமிழக பாஜக சார்பில் அமைக்கப்பட்டுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தலைமை அலுவலகத்தை அண்ணாமலை நேற்று திறந்து வைத்து பேசியதாவது: கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு கிட்டத்தட்ட எதிர்க்கட்சியாகவே மக்கள் பணிகளைச் செய்துள்ளோம். மத்தியில் நல்லாட்சி, தமிழகத்தில் திமுகவின் மோசமான ஆட்சி என காலம் கணிந்து வந்திருக்கிறது. …

Read More »

ராமேசுவரத்தில் 10-ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: பாஜக அரசை கண்டித்து நடப்பதாக கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை. தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதன்மூலம், அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. கடந்த 3-ம் தேதி ராமேசுவரம், தங்கச்சிமடத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததோடு, அவர்கள் பயன்படுத்திய 2 நவீன மீன்பிடி படகுகள் நெடுந்தீவுக்கு அருகே பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் பாக் …

Read More »

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்து கடிதம், மெயில், வாட்ஸ்அப்பிலும் தெரிவிக்கலாம்

சென்னை: மக்களவை தேர்தலை முன்னிட்டு, திமுகவில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு, தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என 3 குழுக்கள் கடந்த ஜனவரி 18-ம் தேதி அமைக்கப்பட்டன. இதில், கனிமொழி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் டிகேஎஸ் இளங்கோவன், ஏகேஎஸ் விஜயன், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா, வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், கேஆர்என் ராஜேஷ்குமார் எம்.பி. …

Read More »

அரசுப் பள்ளிகளுக்கு இருக்கை கொள்முதல் ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் 372 அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்ட 1,881 கூடுதல்வகுப்பறைகளுக்கு 18,810 மேஜையுடன் கூடிய இருக்கைகள், டான்சி நிறுவனத்தின் மூலம் கொள்முதல்செய்து வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, டான்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட தளவாடப் பொருட்களை ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவினர், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்றுபொருட்கள் அனைத்தும் தரத்துடனும், உரிய எண்ணிக்கையிலும் …

Read More »

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து பாம்பனில் வரும் 10ம் தேதி ஆர்ப்பாட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதைக் கண்டித்து வரும் 10ம் தேதி பாம்பனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் ஒட்டுமொத்த கடற்கரையில் 13 சதவிகித கடற்கரை பகுதி தமிழகத்தில் இருக்கிறது. 1076 கி.மீ. நீளம் கொண்ட தமிழக கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீனவ கிராமங்களும், லட்சக்கணக்கான மீனவ மக்களும் …

Read More »

சென்னையில் 160 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் – 36 நபர்கள் கைது

சென்னை: கடந்த 7 நாட்களில் சென்னை மாநகரில் நடைபெற்ற சிறப்பு சோதனையில் 160 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 36 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் …

Read More »

“தமிழ்நாட்டிற்கு முடிந்தளவு உதவ வேண்டும்” – ஸ்பெயின் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: ஸ்பெயினில் நடைபெற்ற “ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்” எனும் நிகழ்வில் அந்நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உங்களின் தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு முடிந்தளவு உதவ வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் …

Read More »

பாஜக கூட்டணியில் இணைகிறதா அதிமுக, பாமக, தேமுதிக? – ஒருங்கிணைக்கும் பணியில் ஜி.கே.வாசன் தீவிரம்

சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக,பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைக்கும் முயற்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தீவிரமாக களமிறங்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதற்குள் இப்பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெற்று, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியமைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து ‘இண்டியா’ கூட்டணியை அமைத்தன. இக்கூட்டணியில் …

Read More »

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்: அமித் ஷாவை சந்திப்பதாக தகவல்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வரும் பிப். 12-ம் தேதி தொடங்குகிறது. மரபுப்படி ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவார். ஏற்கெனவே தமிழக அரசு -ஆளுநர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவும், கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படாததாலும், இந்த ஆண்டு கூட்டத்துக்கு ஆளுநர் அழைக்கப்படுவாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்த …

Read More »