Breaking News
Home / செய்திகள் / ஸ்பெயின் பயணம் நிறைவு – நாளை சென்னை திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்!

ஸ்பெயின் பயணம் நிறைவு – நாளை சென்னை திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்!

ஸ்பெயின் பயணம் நிறைவு - நாளை சென்னை திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்!

ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை நோக்கி தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 27ம் தேதி ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டார்.

முதலமைச்சருடன் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் சென்றிருந்தார்.

ஆகையால், ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தியதுடன், பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டதில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 7,442 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன எனவும் முதல்வர் கூறியிருந்தார்.

அதேபோல, இம்முறை ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர், அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்ய அழைப்பு விடுத்தார். பின்னர் பல முன்னணி நிறுவனங்களிடம் கலந்துரையாடி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதற்கிடையில், அதனைத் தொடர்ந்து, “ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்” எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடினார். இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். இதுதொடர்பான அவரது பதிவில், ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இறுதிக்கட்டமாக ஸ்பெயினில் முன்னணி தொழில் நிறுவன (Gestamp, Talgo, Edibon) நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். இதுபோன்ற பலனளிக்கும் முடிவுகளுடன், நான் நாளை ஸ்பெயினிலிருந்து புறப்படுகிறேன். சில நாட்களுக்குப் பிறகு அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் அவர்கள் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *