சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் 372 அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்ட 1,881 கூடுதல்வகுப்பறைகளுக்கு 18,810 மேஜையுடன் கூடிய இருக்கைகள், டான்சி நிறுவனத்தின் மூலம் கொள்முதல்செய்து வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, டான்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட தளவாடப் பொருட்களை ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும்.
அந்தக் குழுவினர், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்றுபொருட்கள் அனைத்தும் தரத்துடனும், உரிய எண்ணிக்கையிலும் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க வேண்டும். வல்லுநர் குழுவில் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், துறை சார்ந்த வல்லுநர் இடம்பெற வேண்டும்.
பொருட்களின் தரம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிஆய்வை முடிக்க வேண்டும்.ஆய்வுக்கு பின்பு சமர்பிக்கப்படும் அறிக்கையுடன் புகைப்படம் உட்பட ஆவணங்கள் இணைக்கப்படுவது அவசியமாகும்.