Breaking News
Home / செய்திகள் (page 10)

செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்: 3,302 தேர்வு மையங்கள்; முறைகேடுகளை தடுக்க 4,335 பறக்கும் படைகள்

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 1) தொடங்கிமார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது.முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. 7,534 பள்ளிகளில் இருந்து 7.72 லட்சம் மாணவர்கள், 21,875 தனித்தேர்வர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர், 125 சிறை கைதிகள் என மொத்தம் 7.94 …

Read More »

உடல்நலக் குறைவால் உயிரிழந்த சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: சாந்தன் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல தேவையான உதவிகளை செய்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாந்தன், கடந்த 28-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் அவர் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்: தமிழக அரசு …

Read More »

முன்பதிவின்போதே ரூ.40 செலுத்தினால் மாநகர பேருந்து மூலம் கிளாம்பாக்கம் வந்து செல்லலாம்

சென்னை: விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும்போது கூடுதலாக ரூ.40 செலுத்தினால் கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பிற பகுதிகளை மாநகர பேருந்து மூலம் அடையும் வகையிலான திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 திட்டங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார். அதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகள், ரூ.40 கூடுதலாகக் …

Read More »

கோயில் நிலங்களில் கல்வி நிறுவனங்கள் தொடங்கினால் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

சென்னை: கோயில் நிலங்களில் கல்வி நிறுவனங்கள் தொடங்கினால், ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களின் நிதியில் இருந்து புதிதாக கல்லுாரிகள் தொடங்கவும், கோயில் நிதியை வேறு காரியங்களுக்குப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மயிலாப்பூரைச் சேர்ந்தஇண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளையின் நிர்வாகியும், ஆலய வழிபாட்டுக் குழுத் தலைவருமான டி.ஆர்.ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் …

Read More »

தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்: அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை: தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையை சேர்ந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் …

Read More »

மக்களவைத் தேர்தல் | திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்துகொண்டன. பேச்சுவார்த்தையின் முடிவில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவரும் …

Read More »

புதிய வசதி: ரூ.40 செலுத்தினால் கிளாம்பாக்கத்திலிருந்து எங்கும் செல்லலாம்!

சென்னை: போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் , இன்று (29.02.2024), தலைமைச் செயலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40/- கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தினை …

Read More »

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை 6 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை குறித்து ஆறு வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. ஊதிய உயர்வு …

Read More »

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக இருந்த அசோகன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக இருந்த அசோகன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் த.மா.கா. இணைந்தது. பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்ததால் அக்கட்சியினர் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பாஜக கூட்டணியில் த.மா.கா.இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து அசோகன் வெளியேறினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக இருந்த …

Read More »

மதுரை – பெங்களூரு வந்தே பாரத்  ரயிலை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும்: வைகோ

சென்னை: ரயில்வே திட்டங்கள் குறித்து வியாழக்கிழமை மதுரையில், தென்னக ரயில்வே பொதுமேலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, மதுரையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயிலை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும். கரிவலம்வந்தநல்லூர் ரயில் நிலையத்தை மீண்டும் தொடங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வைகோ தென்னக ரயில்வே துறைக்கு முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை விவரம்: தென்னக ரயில்வே துறைக்குவைகோ விடுத்துள்ள கோரிக்கைகள் பின்வருமாறு; 1. கரிவலம்வந்தநல்லூர் ரயில் நிலையத்தை …

Read More »