சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக இருந்த அசோகன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் த.மா.கா. இணைந்தது. பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்ததால் அக்கட்சியினர் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பாஜக கூட்டணியில் த.மா.கா.இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து அசோகன் வெளியேறினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக இருந்த அசோகன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் கட்சியில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை; நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு பேசுகிறது பாஜக. சர்வாதிகாரப் போக்கில் ஒன்றிய பாஜக செயல்பட்டு வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது. ராகுல் – மு.க.ஸ்டாலின் அண்ணன் – தம்பி போல செயல்படுகிறார்கள். கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த தொய்வும் இல்லை. 2 நாட்களில் எங்கள் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழகம் வருவார் இவ்வாறு கூறினார்.