சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 1) தொடங்கிமார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது.முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
7,534 பள்ளிகளில் இருந்து 7.72 லட்சம் மாணவர்கள், 21,875 தனித்தேர்வர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர், 125 சிறை கைதிகள் என மொத்தம் 7.94 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 3,302 தேர்வு மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன.
அறை கண்காணிப்பாளர் பணியில் 43,200 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முறைகேடுகளை தடுக்க 4,335 நிலையான மற்றும்பறக்கும் படைகள் அமைக்கப்பட் டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்தியபோலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
ஹால் டிக்கெட்டில் உள்ள விதிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். தேர்வில்ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுவது, போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும்மாணவர் மீது, விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வுஎழுத தடைவிதிக்கப்படும். ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித் துள்ளது.
பொதுத் தேர்வு குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:
முறையாக பள்ளிக்கு வந்தவர்களுக்கு மட்டுமே ஹால்டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவார் கள் என்று நம்புகிறோம். தேர்வில் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
10-ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் ஐடிஐ, டிப்ளமோ படிப்பு களுக்கு செல்வதால் பிளஸ் 1,பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தலைவர்கள் வாழ்த்து: முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘பிளஸ் 2பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். கல்வி வாழ்க்கையின் அடுத்த கட்டமான பிளஸ் 2 இறுதித்தேர்வை அச்சமற்று எதிர்கொள் ளுங்கள்.
தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே மாணவர்களின் திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. பெற்றோர்களும் இதனை உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களை தவிர்த்து அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.
அதேபோல், பாமக தலைவர் அன்புமணி, வி.கே.சசிகலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஐஜேகே பொதுச் செயலாளர் பி.ஜெயசீலன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் விஎம்எஸ் முஸ்தபா உள்ளிட்டோ ரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.