சென்னை: காங்கிரஸ் கட்சி கொள்கைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி கார்த்தி சிதம்பரத்திடம் விளக்கம் கேட்டு தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மகனும், சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். அவரது கருத்துகள் பல்வேறு நேரங்களில் சர்ச்சைக்குள்ளாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு, …
Read More »வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக புகார்: தனியார் நிறுவனத்தில் வருமானவரி சோதனை
சென்னை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சென்னையில் கிளை அலுவலகங்கள் உள்ளன. இந்நிறுவனம் தொடர்புடைய தொழில் அதிபர் ஒருவருக்கு சொந்தமான தனியார் நிறுவனமும் சென்னையில் உள்ளது. இந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தொழிற்சாலைகள், மருத்துவமனைகளுக்கு காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. இந்த நிறுவனங்கள் வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாககுற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்தநிறுவனம் …
Read More »அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு.. முதல்வர் அறிவிப்பு
சென்னை: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுவரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் திருத்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ 1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் …
Read More »தைத்திருநாளை முன்னிட்டு 12,911 அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
சென்னை: தமிழகத்தில் தைத்திருநாளை முன்னிட்டு 12,911 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகிறது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோயிலில் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 74 கோயில்களின் 128 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகளையும், 339 பணியாளர்களுக்கு சீருடைகளையும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று வழங்கினார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்றபின், …
Read More »தமிழ்நாட்டில் தென்காசி உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் தென்காசி உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி …
Read More »‘மதச்சார்பு சிறுபான்மையினர்’ அந்தஸ்து சான்றிதழ் இனி நிரந்தரமானதாக வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ‘மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதச்சார்பு சிறுபான்மையினர் (Religious Minority) அந்தஸ்து சான்றிதழ் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இனி வருங்காலங்களில் இச்சான்றிதழ் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும்’ என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்து நிதி …
Read More »கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு: பிரம்மாண்டமாக தயாராகும் சென்னை நேரு விளையாட்டு மைதானம்
சென்னை: 6-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதுக்குட்பட்ட பிரிவில் சுமார் 5,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த ஆண்டு டெமோ விளையாட்டாக …
Read More »“கூட்டணி முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன்” – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு
சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மக்களவை தேர்தலுக்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொள்வது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதிமுக தரப்பில் ஏற்கனவே பூத் கமிட்டி அமைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், பல்வேறு மாவட்டங்களில் பூத் கமிட்டிகள் …
Read More »பள்ளிக் கல்வித்துறை சார்பில் ‘நலம் நாடி’ செயலியை அறிமுகம் செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்..!!
சென்னை: பள்ளிக் கல்வித்துறை சார்பில் ‘நலம் நாடி’ செயலியை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிமுகம் செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் மாணவர் நலனுக்கான ‘நலம் நாடி’ செயலி வெளியிடப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். நலம் நாடி செயலி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருக்கிறார்.
Read More »சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி ராஜேஷ்தாஸ் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய ராஜேஷ் தாஸ் மனுவில் முகாந்திரம் இல்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ராஜேஷ் தாஸ் …
Read More »