சென்னை: பள்ளிக் கல்வித்துறை சார்பில் ‘நலம் நாடி’ செயலியை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிமுகம் செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் மாணவர் நலனுக்கான ‘நலம் நாடி’ செயலி வெளியிடப்பட்டது.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். நலம் நாடி செயலி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருக்கிறார்.