சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: மத்திய கல்வி அமைச்சகம் அறிவுத்தியுள்ள ராணி லட்சுமிபாய் தற்காப்பு கலை பயிற்சி திட்டத்தின் கீழ் 2015 முதல் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2023–24) பயிற்சிக்காக 6,941 நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.10.41 கோடி நிதியானது திட்ட இயக்குநரகம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் 6,267 …
Read More »4 மாநில தேர்தல் முடிவுகள்: வெற்றி பெற்ற கட்சிகளுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
சென்னை: நடந்து முடிந்த 4 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், வெற்றி பெற்ற கட்சிகளுக்கு முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துக்கள். அவர்களின் ஆட்சிக்காலம் சமூகத்தில் அனைத்து பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கும் நல்ல மாற்றத்தையும், வளர்ச்சியையும், வளத்தையும் அளிப்பதாக அமைய விழைகிறேன். முன்னாள் …
Read More »உணவு, நீர், பால் உள்ளிட்ட பொருட்களை முன்கூட்டியே கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்: பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்
சென்னை: பொது மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மிக்ஜாம் புயல் சென்னைக்கு மிக அருகில் கடந்து செல்வதால், மிக கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். …
Read More »புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தொலைபேசி மூலம் ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கினார். வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல், இன்று தமிழக வடகடலோர மாவட்டங்களை நெருங்கிச்செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காற்று மற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை அதிகம் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு …
Read More »`மிக்ஜாம்’ புயல் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக சென்னை விமான நிலையத்தில் சிறப்பு குழு
சென்னை: மிக்ஜாம் புயலின் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக சென்னை விமான நிலையத்தில் 100-க்கும்மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தாக்கத்தை எதிர்கொள்வது தொடர்பாக, சென்னை விமான நிலைய இயக்குநர் சி.வி.தீபக் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலமாக நடைபெற்றது. இதில் சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், இந்திய வானிலைஆராய்ச்சி நிலைய அதிகாரிகள், அனைத்து விமான நிறுவனங்களின் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், …
Read More »திக தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கி. வீரமணி திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக முழு நேரமும் கட்சிப் பொறுப்பை கவனிக்கும் விதத்தில் பெரியாரால் 1962 இல் நியமிக்கப்பட்டவர். பெரியாரின் மறைவுக்குப்பின்பும், மணியம்மையாரின் மறைவுக்குப்பின்பும் தொடர்ந்து இயக்கத்தை நடத்தி வருகிறார். 2003 ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுச் செயல்படுகிறார். ஆங்கிலத்தில் (The Modern Rationalist) மாத இதழ், தமிழில் …
Read More »500 டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் கருத்து
சென்னை: 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவில் தலையிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 500 டாஸ்மாக் கடைகளை மூட, டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஜூன் 20ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. பொது நலன் கருதி டாஸ்மாக்கை மூடும் அரசின் கொள்கை முடிவை எதிர்த்து நில உரிமையாளர்கள் வழக்கு தொடரமுடியாது என ஐகோர்ட் தெரிவித்திருக்கிறது.
Read More »ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர் ராஜசேகர் அபுதாபியில் கைது: விரைவில் சென்னைக்கு அழைத்துவர நடவடிக்கை
சென்னை: ஒரு லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடி வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர் ராஜசேகர் அபுதாபியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் சென்னை அழைத்து வரப்பட உள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை அமைந்தகரை மேத்தா நகரை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ‘ஆருத்ரா கோல்டு டிரெடிங்’ என்ற பெயரில் ஆருத்ரா தனியார் நிதி …
Read More »அமலாக்க துறை அதிகாரியை விஜிலென்ஸ் கைது செய்ய அதிகாரம் இருக்கா? மதுரை ED அதிகாரி கைதால் பரபரப்பு
சென்னை: அமலாக்கத் துறை அதிகாரியைத் தமிழ்நாடு விஜிலென்ஸ் துறை கைது செய்துள்ள நிலையில், இதற்கு விஜிலென்ஸ் துறைக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது குறித்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சித்தண்ணன் விளக்கியுள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டரை மிரட்டி லஞ்சம் வாங்க முயன்றதாக அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அங்கித் திவாரி பணியாற்றி வந்த மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் விஜிலென்ஸ் …
Read More »சென்னை சர்வதேச திரைப்பட விழா 14ம் தேதி தொடங்குகிறது : 12 தமிழ் படங்கள் விருதுக்காக மோதல்
சென்னை: இன்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு, தமிழக அரசுடன் இணைந்து ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழாவை சென்னையில் நடத்தி வருகிறது. அந்த வரிசையில் 21வது சர்வதேச திரைப்பட விழா வருகிற 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் 57 நாடுகளை சேர்ந்த 126 படங்கள் திரையிடப்படுகின்றன.இதில் பல விருதுகளை வென்ற வெளிநாட்டு படங்களான தி டீச்சர்ஸ் லவுஞ்ச், பேர்ப்பக்ட் டேஸ், டூ …
Read More »