சென்னை: 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவில் தலையிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
500 டாஸ்மாக் கடைகளை மூட, டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஜூன் 20ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. பொது நலன் கருதி டாஸ்மாக்கை மூடும் அரசின் கொள்கை முடிவை எதிர்த்து நில உரிமையாளர்கள் வழக்கு தொடரமுடியாது என ஐகோர்ட் தெரிவித்திருக்கிறது.