சென்னை: தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி இப்போது ஆட்சியை அமைத்துள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இன்றைய தினம் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மிசோரத்தில் இன்று நடைபெற இருந்த வாக்கு எண்ணிக்கை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று வரை வெளியான சர்வேக்களில் இதில் தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் …
Read More »‘கற்பனைக் கடவுள்’ தன்வந்திரியை தேசிய மருத்துவ ஆணைய லோகோவில் திணிப்பதா? – அன்புமணி கண்டனம்
சென்னை: “தன்வந்திரி கடவுள் ஓர் அழகான கற்பனை; அதனை தேசிய மருத்துவ ஆணைய லோகோவில் திணிப்பதா? இது கண்டிக்கத்தக்கது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் அமைப்பான தேசிய மருத்துவ ஆணையத்தின் இலட்சினையில் தன்வந்திரி எனப்படும் கடவுளின் உருவப்படம் திணிக்கப்பட்டிருப்பதும், இந்தியா என்ற பெயருக்கு மாற்றாக பாரத் என்ற பெயர் …
Read More »உலகின் பெரிய கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை கல்பாக்கத்தில் அமைகிறது!
சென்னை: சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் அமைய உள்ள, உலகின் மிக பெரிய கடல் நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு, கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளில் ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வாக கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைகள் பெரும்பாலும் ‘ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்’ முறையில் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் குடியிருப்பு வளாகங்களில், தினம் …
Read More »கேஸ், பெட்ரோல் விலை வட இந்தியர்களை பாதிப்பதில்லை.. அதனால்தான் பாஜக ஜெயிக்கிறது! இப்படி ஒரு தியேரி
சென்னை: கேஸ், பெட்ரோல் விலை வட இந்தியர்களை பாதிப்பதில்லை அதனால் தான் பாஜக ஜெயிக்கிறது என திமுக ஆதரவு சமூக வலைதளவாசிகள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற போது வேதாளன் என்பவர் வெளியிட்ட எக்ஸ் சமூக வலைதளப் பதிவு நேற்று முதல் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், இந்தப் …
Read More »தேசிய பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒவ்வொன்றாக கழன்று வருகிறது: திமுக வர்த்தகர் அணி மாநில செயலாளர் காசி.முத்துமாணிக்கம் பேச்சு
சென்னை: திமுக மாநில வர்த்தகர் அணி சார்பில் கலை இலக்கிய நாடகத் திருவிழா திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, மாநில வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி.முத்துமாணிக்கம் தலைமை வகித்து பேசியதாவது:கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக பாஜ தேய்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், உத்திரபிரதேசத்தில் கூட மிகப் பெரிய சரிவை தான் சந்திக்கும். தேசிய அளவில் பாஜ கூட்டணியில் 37 கட்சி. ஆனால் 27 …
Read More »சென்னையில் பெய்த தொடர்மழையில் கட்டடச் சுவர் இடிந்து விபத்து – இருவர் உயிரிழப்பு!
சென்னை: சென்னையில் ‘மிக்ஜம்’ புயலால் நேற்று நள்ளிரவு முதல், தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் பெய்துவரும் தொடர்மழையால், கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை கானாத்தூர், ஈசிஆர் இந்திராகாந்தி தெருவில் புதியதாக கட்டடம் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த நிலையில், மழையில் நனைந்திருந்த கட்டடத்தின் ஒருபக்கச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அதில், கட்டடத்தினுள் தங்கியிருந்த …
Read More »ஸ்டன் ஆன தலைநகர்! மொத்தமாக முடங்கிய சென்னை.. எல்லா சேவைகளும் ரத்து..
சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக முக்கியமான சேவைகள், வசதிகள் எல்லாம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது., இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த மிக்ஜாம் புயல் சென்னையை அப்படியே முடக்கி போட்டுள்ளது. புயல் காரணமாக என்னென்ன சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று பார்க்கலாம். மின்சார தடை: சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின் தடை செய்யப்பட்டு உள்ளது. தரைக்கு கீழே மின் கம்பிகள் செல்லும் …
Read More »6ஜி நெட்வொர்க் டெக்னாலஜிக்கு ரெடியாகுங்க..: கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி அறிவுறுத்தல்
சென்னை: 6ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்திற்கு ஏற்றபடி கல்வி தரத்தை மேம்படுத்த அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவுறுத்தியுள்ளது. அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி, கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:6ஜி நெட்வொர்க் தகவல் தொழில்நுட்பம் உருவாக்கி வரும் போக்குகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளவும், 5ஜி நெட்வொர்க் அம்சங்களின் முழுத் திறனை பயன்படுத்தவும், நம்முடைய எதிர்கால ஆராய்ச்சியாளர்கள், இன்ஜினியர்கள் தேவையான திறன்கள், மனநிலையை பெற்றிருக்க வேண்டியது …
Read More »மழை மீட்பு பணிகளில் ஒருங்கிணைந்து பணியாற்றும் சென்னை போலீஸார்: வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் உடனுக்குடன் தகவல் பரிமாற்றம்
சென்னை: மழை மீட்பு பணிகளில் மாநகராட்சி உள்பட பிற துறையினருடன் சென்னை காவல் துறையினர் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை கொட்டுகிறது. மீட்பு பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க சென்னை காவல் துறையின் பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் உள்ள 12 …
Read More »3 மாநில பேரவைத் தேர்தலில் வெற்றி: பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சென்னை: 3 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மிசோரம் தவிர மற்ற 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, பாஜக முன்னிலை வகித்த நிலையில், நாடு முழுவதும் உள்ள …
Read More »