Breaking News
Home / செய்திகள் (page 113)

செய்திகள்

போதை பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை காவல் துறை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அண்ணா நகரில் கஞ்சா போதையில் கார் ஓட்டிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக இளைஞர்கள் மதுவுக்கும், கஞ்சாவுக்கும் அடிமையாகி மிக மோசமாக சீரழிந்து வருகின்றனர். கஞ்சா, மதுவால் …

Read More »

மோடி கேபினட்டில் 12 அமைச்சர்கள்.. தெலுங்கானா தேர்தல் பரபரப்புக்கு இடையே அண்ணாமலை சொன்ன டேட்டா!

சென்னை: மோடி அமைச்சரவையில்தான், அருந்ததியர் சமூகத்திற்கும் மடிகா சமூகத்திற்கும், பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. மத்திய அமைச்சரவையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் கட்சியான பிஆர்எஸ், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக என மும்முனைப் …

Read More »

தீபாவளியை கொண்டாடிவிட்டு திரும்பும்போது சோகம் கவுன்சிலர், 6 மாத குழந்தை உட்பட 13 பேர் விபத்தில் பலி

சென்னை: தீபாவளியை கொண்டாடிவிட்டு திரும்பும்போது விபத்தில் சிக்கி திமுக கவுன்சிலர், 6 மாத குழந்தை உட்பட 13 பேர் பலியாகினர். கோவை மாவட்டம், போத்தனூர் செட்டிபாளையம் 10-வது வார்டு திமுக கவுன்சிலர் சந்தோஷ்குமார் (27). இவரது மனைவி இந்துமதி (23). இவர்களுக்கு பிறந்து 6 மாதமே ஆன காஜல் என்ற பெண் குழந்தை இருந்தது. தீபாவளி பண்டிகையையொட்டி சேலத்தில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் …

Read More »

ஒரே இரவில் நடந்த பெரிய மாற்றம்.. தீபாவளி முடிந்ததும் இபி போர்ட் வெளியிட்ட தகவல்.. ஹப்பா இனி நிம்மதி!

சென்னை: தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பதவி ஏற்றத்தில் இருந்தே பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் நேற்று தமிழ்நாடு மின் தேவையில் அதிரடி மாற்றம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. பொதுவாகவே வெயில் காலத்தில் மின்சார தேவை அதிகரிப்பது வழக்கம். கடந்த மே, ஜூன் தொடங்கி சென்ற மாதம் வரை மின்சார தேவை அதிகரித்து வந்தது. வெயில் காலம் காரணமாக மக்கள் பலரும் ஏசி பயன்படுத்துவது …

Read More »

திமுக இளைஞரணி கோட்டாவில் 5 MPசீட்! யார் யாருக்கு வாய்ப்பு? சேலம் மாநாட்டிற்கு பிறகு உதயநிதி தேர்வு!

சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இளைஞரணிக்கு 5 எம்.பி. சீட்களையாவது ஸ்டாலினிடம் கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் சார்பு அணிகளில் பிரதான இடத்தில் இருப்பது அக்கட்சியின் இளைஞரணி. ஸ்டாலின், வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகிய இருவர் வசம் இருந்த திமுக இளைஞரணி இப்போது கடந்த 5ஆண்டுகளாக உதயநிதி ஸ்டாலின் வசம் உள்ளது. ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்தக் காரணத்தால் அந்த அணியின் செயல்பாடுகள், …

Read More »

விரைவில் குரூப்-4 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு

சென்னை: விரைவில் TNPSC குரூப் 4 2023 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று, அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் குரூப் 4 தேர்வு நடத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஜூனியர் அசிஸ்டன்ட், பில் கலெக்டர், தட்டச்சர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில், கூடிய விரைவில் TNPSC குரூப் 4 2023 …

Read More »

சென்னையை சேர்ந்தவர் எடுத்த ஃபோட்டோவை பகிர்ந்த சுந்தர் பிச்சை.

சென்னை: சென்னையை சேர்ந்த மதன் மோகன் என்பவர் கூகுள் பிக்சல் போனில் எடுத்த புகைப்படத்தை கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஒ. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோவுக்கு பிரியங்கா சோப்ரா ரியாக்சன் செய்ததால் இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இதன் தனித்துவம், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை காரணமாக இதன் விற்பனை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன் …

Read More »

செட்டில்மென்ட் பத்திரம்.. திடீர் திடீர்னு ஏறிய கட்டணம்.. வருவாய் குறைவு? பதிவுத்துறை முக்கிய முடிவு?

சென்னை: பத்திரப்பதிவு கட்டணங்கள் மற்றும் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்புகள் அடுத்தடுத்து உயர்த்தப்பட்ட நிலையில், இதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் இருக்கின்றன.. இதன் மூலம் வீடு, நிலங்கள் உள்பட பல்வேறு தொழில் சம்பந்தமான பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. வருமானம் குறைவு: ஆனால், வருடத்துக்கு குறைந்தபட்சம் 25 லட்சம் ஆவணங்கள் வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.. காரணம், …

Read More »

செமி பைனலுக்கு போவதற்கு முன்பே.. இந்திய அணிக்கு வந்த குட் நியூஸ்.. இது போதுமே.. குஷியில் ரசிகர்கள்

சென்னை: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் செமி பைனல் நடக்கும் முன்பே இந்திய அணிக்கு குஷியான செய்தி ஒன்று வந்துள்ளது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் உலகக் கோப்பை போட்டி நாளை நடக்க உள்ளது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் உச்சத்தை எட்டி உள்ளது. இன்னும் 3 போட்டிகள் மட்டுமே இந்த தொடரில் உள்ளது. இன்னும் 2 போட்டிகளில் மட்டும் வென்றால் போதும் இந்திய அணி …

Read More »

தூய்மை பணியில் 19,000 மாநகராட்சி ஊழியர்கள்; சென்னையில் 210 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள்: ஆணையர் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் 180 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தீபாவளிபண்டிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து, வீடுகளுக்கு முன் தெருக்களில் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சென்னையைப் பொறுத்தவரை 15 மண்டலங்களில் 35 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இவற்றில் வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சியின் தூய்மை …

Read More »