Breaking News
Home / செய்திகள் / திமுக இளைஞரணி கோட்டாவில் 5 MPசீட்! யார் யாருக்கு வாய்ப்பு? சேலம் மாநாட்டிற்கு பிறகு உதயநிதி தேர்வு!

திமுக இளைஞரணி கோட்டாவில் 5 MPசீட்! யார் யாருக்கு வாய்ப்பு? சேலம் மாநாட்டிற்கு பிறகு உதயநிதி தேர்வு!

சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இளைஞரணிக்கு 5 எம்.பி. சீட்களையாவது ஸ்டாலினிடம் கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

திமுகவின் சார்பு அணிகளில் பிரதான இடத்தில் இருப்பது அக்கட்சியின் இளைஞரணி. ஸ்டாலின், வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகிய இருவர் வசம் இருந்த திமுக இளைஞரணி இப்போது கடந்த 5ஆண்டுகளாக உதயநிதி ஸ்டாலின் வசம் உள்ளது. ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்தக் காரணத்தால் அந்த அணியின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் அனைத்தும் கட்சியினரால் உற்றுநோக்கி கவனிக்கப்பட்டு வருகின்றன. திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினும், 9 மாநில துணைச் செயலாளர்களும் உள்ளனர்.

இவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்று மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் நியமனத்தை அண்மையில் தான் நடத்தி முடித்துள்ளனர். இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நடைபெறுவதை ஒட்டி அது தொடர்பான பணிகளில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த மாநாடு முடிந்த பிறகு மாநாட்டிற்கு யார் யார் எந்தெந்த வகையில் கடுமையாக உழைத்தார்கள் என்பதை ஆராய்ந்து அவர்களுக்க் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி.சீட் கொடுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகம் புதுச்சேரி என மொத்தம் உள்ள 40 இடங்களில் திமுக இளைஞரணிக்கு 5 இடங்களை தலைமையிடம் கேட்டு வாங்குவது என்ற முடிவில் இருக்கிறாராம் உதயநிதி ஸ்டாலின். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தனுஷ்குமார், திருவண்ணாமலை அண்ணாதுரை, தர்மபுரி செந்தில்குமார் ஆகிய மூவரும் இளைஞரணி கோட்டாவில் தான் எம்.பி.சீட் வாங்கி டெல்லி சென்றனர். இந்த முறை 5 இடங்களை கேட்டு வாங்கி அதில் யாருக்கு வாய்ப்பு தருவது என்பதை உதயநிதி ஸ்டாலின் தான் முடிவு செய்யவுள்ளார்.

இதனால் சேலம் திமுக இளைஞரணி மாநாட்டு பணிகளை நிர்வாகிகள் பலரும் இழுத்துப் போட்டுக்கொண்டு கவனித்து வருகின்றனர். இதனிடையே திமுக இளைஞரணி கோட்டாவில் பல புதுமுகங்களுக்கு எம்.பி.சீட் கொடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *