சென்னை: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் செமி பைனல் நடக்கும் முன்பே இந்திய அணிக்கு குஷியான செய்தி ஒன்று வந்துள்ளது.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் உலகக் கோப்பை போட்டி நாளை நடக்க உள்ளது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் உச்சத்தை எட்டி உள்ளது. இன்னும் 3 போட்டிகள் மட்டுமே இந்த தொடரில் உள்ளது.
இன்னும் 2 போட்டிகளில் மட்டும் வென்றால் போதும் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றுவிடும். அதோடு இல்லாமல் இந்த முறை இந்திய அணி முழு பார்மில் இருக்கிறது. மற்ற அணிகளை விட வலுவாக இருக்கிறது. இதனால் இந்திய அணிக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
நல்ல செய்தி; செமி பைனல் நடக்கும் முன்பே இந்திய அணிக்கு குஷியான செய்தி ஒன்று வந்துள்ளது. அதன்படி இந்த போட்டியில் இருக்க போகும் நடுவர்கள் யார் என்ற லிஸ்ட் வெளியாகி உள்ளது. கள நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த் & ராட் டக்கர், மூன்றாவது நடுவர்: ஜோயல் வில்சன் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரீச்சர்ட் கெட்டில்பெர்க் இந்த போட்டியில் நடுவராக இல்லை என்று நெட்டிசன்கள் சந்தோசம் அடைந்துள்ளனர். கடந்த உலகக் கோப்பை செமி பைனலில் இவர் நடுவராக இருந்த போதுதான் இந்திய அணி தோல்வி அடைந்தது. இவர் அம்பயராக வந்த போதுதான் உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான செமி பைனல் போட்டியில் தோல்வி அடைந்தது. அப்போதும் வெறும் 2 ரன்னுக்கு இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்தது .
ரீச்சர்ட் கெட்டில்பெர்க் நடுவராக இருந்த போதெல்லாம் இந்தியா வீழ்ந்து உள்ளது. ரிச்சர்ட் கெட்டில்பரோ – இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய கெட்ட கனவாக மாறி உள்ளார். இதற்கு முன் இவர் நடுவராக இருந்த போது பின்வரும் போட்டிகளை இந்தியா இழந்தது.
• 2015 WC அரையிறுதி.
• 2016 WC அரையிறுதி.
• 2017 CT இறுதிப் போட்டிகள்.
• 2019 அரையிறுதி.
• 2021 PAKக்கு எதிராக.
• 2023 WTC இறுதிப் போட்டிகள்.
• 2023 WC (இன்று).
இவரை வைத்து நெட்டிசன்கள் பலரும் கூட இப்போது மீம்ஸ் போட்டு வருகின்றனர். அவர்தான் இந்திய அணிக்கு பெரிய கெட்ட சகுனம். அவர் வரும் மேட்ச் எல்லாம் இப்படித்தான் நடக்கிறது என்று மீதம் போட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் இந்த முறை செமி பைனலில் அவர் இல்லாதது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
2023 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியை செமி பைனலில் எதிர்கொள்ள உள்ளது. கிட்டத்தட்ட இந்த உலகக் கோப்பை 2019 உலகக் கோப்பை போல இந்த செமி பைனல் மாறிவிடும். செமி பைனலில் நாம் நியூஸிலாந்திடம் ஏற்கனவே தோல்வி அடைந்துவிட்டோம்.
இந்த முறை செமி பைனலுக்கு 9 முறை தொடர் வெற்றிகளோடு இந்தியா சென்றுள்ளது. ஏற்கனவே நியூசிலாந்தை ஒருமுறை இந்தியா இந்த தொடரில் வீழ்த்தியும் விட்டது. இந்திய அணி எப்போதுமே லீக் ஆட்டங்களில் நன்றாக ஆடி உள்ளது. ஆனால் செமி, பைனல் போன்ற நாக் அவுட் போட்டிகளில் தோனிக்கு பின்பாக எந்த கேப்டனும் சரியாக ஆடவில்லை. அந்த அழுத்தம் இப்போதும் இந்திய அணிக்கு இருக்கும். அதை சரி செய்ய இந்திய அணி கஷ்டப்பட வேண்டும். இதுவே பெரிய அழுத்தத்தை இந்திய வீரர்களுக்கு கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.