சென்னை: விரைவில் TNPSC குரூப் 4 2023 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று, அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் குரூப் 4 தேர்வு நடத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஜூனியர் அசிஸ்டன்ட், பில் கலெக்டர், தட்டச்சர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது.
அந்த வகையில், கூடிய விரைவில் TNPSC குரூப் 4 2023 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று, அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் குரூப் 4 தேர்வு நடத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் குரூப் 4 தேர்வுக்கான அனைத்து அறிவிப்புகளையும் https://www.tnpsc.gov.in/ என்கிற இணையதள பக்கத்தின் மூலமாகவே அறிந்துகொள்ளலாம்.
இதையடுத்து அதே நேரத்தில், இம்மாதத்திலேயே குரூப் 4 தேர்விற்கான விண்ணப்ப பதிவு துவங்கப்படலாம் என்பதால் தேர்வாளர்கள் சரியான நேரத்தில் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.