Breaking News
Home / செய்திகள் (page 116)

செய்திகள்

பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த இருவருக்கு அறுவை சிகிச்சை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: “தீபாவளி பண்டிகையையொட்டி, நேற்று இரவு முதல் இன்று காலை வரை, தமிழகத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையைத் தவிர்த்து வேறு எங்கும், பட்டாசுகள் வெடித்து காயம் ஏற்பட்ட நிலையில், யாரும் அனுமதிக்கப்படவில்லை”, என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் …

Read More »

சென்னையில் காற்று மாசுபாடு மேலும் அதிகரிப்பு – பல இடங்களில் 100ஐ தாண்டியது காற்றின் தரக்குறியீடு

சென்னை: தீபாவளி பண்டிகையை அடுத்து சென்னையின் பல இடங்களில் காற்று மாசு அதிகரித்தது. பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு 100ஐ தாண்டியது. தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை சென்னை காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. தீபாவளி பண்டிகை தினமான இன்று, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும் என்று காவல் …

Read More »

தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்…

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இல்லங்களில் தீப ஒளி ஏற்றியும், புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்தும் மக்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

Read More »

பெருங்களத்தூரை விடுங்க.. கலங்கிய தாம்பரம்.. சென்னையில் பரவும் “சால்மோனெல்லா டைஃபி”.. இதுதான் அறிகுறி

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, முக்கிய எச்சரிக்கையும், அறிவுறுத்தலையும் பொதுமக்களுக்கு விடுத்துள்ளனர். தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தொடர்ந்து மழை பெய்து வருகிறது.. இதனால், மழைக்கால நோய்களாக, காய்ச்சல், சளி பாதிப்புகள் இனிவரும் நாட்களில் அதிகரிக்கும் என்கிறார்கள்.. இப்படித்தான், கடந்த செப்டம்பர் மாதமும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிக …

Read More »

புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் நவ.14 முதல் பரவலாக மழை பெய்யும்

சென்னை: வங்கக்கடலில் வரும் 15-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. வரும் 14-ம் தேதி முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 15-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தமிழகத்தில் வரும் 14-ம் தேதி …

Read More »

பாரதிதாசன் பல்கலை., மாணவர்களுக்கு தற்காலிக பட்டச் சான்றிதழ் வழங்க உடனடி நடவடிக்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 147 கல்லூரிகளில் படித்து 2022-23 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவ, மாணவியருக்கு 6 மாதங்களுக்கு மேலாகியும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும் , தற்காலிக பட்டச் சான்றிதழும் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இந்தத் தாமதத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது …

Read More »

‘ அரசியல் எதிரிகள் யாரோ கடிதம் எழுதிய பிறகுதான்…’ – உயர் நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பு வாதம்

சென்னை: அரசியல் எதிரிகள் கடிதம் எழுதியதன் அடிப்படையில் தனக்கு எதிரான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது என தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் லஞ்ச …

Read More »

முடிவுக்கு வந்தது ஆப்கானிஸ்தான் போராட்டம்! அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது!

2023 உலகக்கோப்பை தொடரில் முதலிரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்தாலும், நடப்பு உலக சாம்பியன் அணியான இங்கிலாந்தை வீழ்த்தி தொடங்கிய ஆப்கானிஸ்தானின் வெற்றிப்பயணம், அடுத்தடுத்து உலக சாம்பியன்களான பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி உச்சத்தில் சென்று நின்றது. உடன் நெதர்லாந்தையும் தோற்கடித்த ஆப்கானிஸ்தான், 7 போட்டிகளில் 4-ல் வெற்றிபெற்று அரையிறுதி செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. செமிபைனல் செல்வதற்கான முக்கியமான போட்டியில் 5 முறை உலகக்கோப்பை வென்ற ஜாம்பவான் அணியான ஆஸ்திரேலியாவை …

Read More »

தீபாவளியால் காலியான சென்னை… கடந்த இரண்டு நாட்களில் வெளியேறியது இத்தனை லட்சம் பேரா?

சென்னை: சென்னையில் இருந்து கடந்த இரண்டு நாட்களில் பல லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்கள். கடந்த இரண்டு நாட்களில் ஆம்னி பேருந்துகளில் 1,17,600 பேர் பயணித்துள்ளனர். எத்தனை லட்சம் பேர் ரயில், அரசு பஸ்களில் பயணித்துள்ளார்கள் என்பதை பார்ப்போம். தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து கடந்த இரண்டு நாட்களில் லட்சக்கணக்கானர் புறப்பட்டு சென்றனர் . இதனால், நேற்று சென்னை எழும்பூர், சென்டர் ரயில் நிலையங்களில் …

Read More »

வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : தமிழ்நாட்டில் வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சென்னை செனாய் நகரில் உள்ள கஜலட்சுமி காலனி கல்யாண மண்டபத்தில் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழ்நாட்டில் வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ …

Read More »