சென்னை: இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் சென்னையில் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் அமைக்கப்படும் வொண்டர்லாவில் இந்த ரோலர் கோஸ்டர் அமைக்கப்பட உள்ளது.
வொண்டர்லா நிறுவனம் சென்னை அருகே தனது திட்டப்பணிகளை தொடங்கியுள்ளது. மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு, செங்கல்பட்டில் உள்ள திருப்போரூரில் உள்ள இல்லலூர் கிராமத்தில் 62 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா தொடங்க அந்நிறுவனம் அனுமதியும் பெற்றுள்ளது.
இது தொடர்பாக வொண்டர்லா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசிடமிருந்து தேவையான ஒப்புதல், அனுமதி மற்றும் தடையில்லாச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளோம். பூமி பூஜை செய்து வேலையைத் தொடங்கி உள்ளோம். பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது,” என்று வொண்டர்லா அம்யூஸ்மென்ட் பார்க்ஸ் மற்றும் ரிசார்ட்டின் நிர்வாகம் கூறியுள்ளது. இந்த திட்டம் ஜூன் 2025 க்குள் முடிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகாவில் உள்ள இல்லலூர் கிராமத்தில் 62 ஏக்கரில் சுமார் ₹400 கோடி முதலீட்டில் இத்திட்டம் அமைக்கப்பட உள்ளது.
என்ன திட்டம்: 2015 இல் நடந்த முதல் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பில் (ஜிஐஎம்) வொண்டர்லா நிறுவனம் அரசாங்கத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயு) இப்போதுதான் காட்டப்படுகிறது. . உள்ளூர் வரி (எல்பிடி) காரணமாக இந்த திட்டம் உடனடியாக தொடங்கப்படவில்லை. அந்த நேரத்தில், மாநிலத்தில் உள்ள கேளிக்கை பூங்காக்கள் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) 18% மற்றும் அதற்கு மேல் மாநிலத்தால் விதிக்கப்பட்ட எல்பிடியில் 10% செலுத்த வேண்டும்.. 2018 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் மாநிலத்தின் LBTயை அரசு திரும்பப் பெறவில்லை என்றால், திட்டத்தை கைவிடுவதாகக் கூறியது. COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு, நிறுவனம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது இந்த திட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
சுற்றுலா திட்டம்: தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அதன் சுற்றுலா கொள்கையில், பொழுதுபோக்கு பூங்கா மற்றும் தீம் பார்க் இடத்தில் சுற்றுலா திட்டங்களுக்கு ஒற்றை சாளர அனுமதி வழங்கப்படும் என்று மாநில அரசு கூறி உள்ளது. டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் போன்ற உலகளாவிய தீம் பூங்காக்கள் போன்று, சென்னையின் புறநகர்ப் பகுதியில் குறைந்தது 100 ஏக்கரில் ஒரு பெரிய அளவிலான பொழுதுபோக்கு பூங்காவை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் கொள்கை குறிப்பிடுகிறது.
தனியார் பங்களிப்புடன் பூங்கா மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் ஒரு கட்டமாக தற்போது இந்த தீம் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் சென்னையில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக வொண்டர்லா நிறுவனம் தனது சென்னை திட்டத்திற்குத் தேவையான அனைத்து ஒப்புதல்கள் / அனுமதிகள் / என்ஓசிகளை தமிழ்நாடு அரசாங்கத்திடமிருந்து வெற்றிகரமாகப் பெற்றுள்ளது, இதனால் ரோலர் கோஸ்டர் கட்டுமானத்தைத் தொடங்கத் தயாராக உள்ளது, என்று வொண்டர்லா ஹாலிடேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருவல்லிக்கேணி டூ நுங்கம்பாக்கம்.. ஏரியா மாறி வந்த டிராபிக் எஸ்ஐ.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே இந்த திட்டம் ஜூன் 2025 க்குள் முடிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகாவில் உள்ள இல்லலூர் கிராமத்தில் 62 ஏக்கரில் சுமார் ₹400 கோடி முதலீட்டில் இத்திட்டம் அமைக்கப்பட உள்ளது