2024-ம் ஆண்டிற்கான டி20 உஉலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தப் போகும் கேப்டன் யார் என்பதை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்திருக்கிறார்.
கடந்த டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு பின் ரோஹித் சர்மா இந்திய டி20 அணியில் இடம்பெறவில்லை. இதனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விளையாடி வந்தனர். அதேபோல ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன்சி பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் இருந்து பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவிற்குக் கொடுக்கப்பட்டது. இதனிடையே சீனியர்களான ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் டி20 அணியில் இடம்பெறுவார்களா என்பதே விவாதத்துக்கு உட்பட்டதாக இருந்தது.Rohit Sharma, Hardik Pandya
ரோஹித் – பாண்டியா இருவருக்கும் இடையே மறைமுகமாகப் போட்டி, முட்டல் மோதல் என்பதாக செய்திகள் பரவிய நிலையில், இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜெய் ஷா, “நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிபோட்டியில் வேண்டுமானால் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கலாம்.
ஆனால் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்று ரசிகர்களின் மனதை நாம் வென்றோம். நிச்சயமாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையை வெல்வோம். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிச்சயம் வெல்லும்.Rohit Sharma
இந்திய அணியின் மூவர்ண தேசிய கொடியை நாம் ஏற்றுவோம்” என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மாதான் கேப்டனாகப் பொறுப்பேற்று வழிநடத்துவார் என்பது உறுதியாகி இருக்கிறது.