India Vs Australia Final | U19 ICC World Cup 2024: இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் கேரி லினேக்கர் ஒருமுறை பொறாமையுடன் 1980கள் மற்றும் 90களின் பிற்பகுதியில் ஜெர்மன் அணியைப் பற்றி இவ்வாறு கூறினார்: “கால்பந்து ஒரு எளிமையான விளையாட்டு.
இருபத்தி இரண்டு பேர் 90 நிமிடங்களுக்கு ஒரு பந்தை துரத்துகிறார்கள், முடிவில், ஜெர்மனியர்கள் எப்போதும் வெற்றி பெறுவார்கள்.” என்றார். அந்த வகையில், சர்வதேச கிரிக்கெட்டின் சூழலில், ஆஸ்திரேலியாவைப் பற்றியும் இப்படிச் சொல்லலாம். அவர்கள் எப்போதும் பெரிய இறுதிப் போட்டியில் வெற்றி பெறுகிறார்கள். அதுவும் இந்தியாவுக்கு எதிராக எளிதில் வென்று விடுகிறார்கள்.
கடந்த 7 மாதத்தில் மட்டும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐ.சி.சி நடத்திய உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவை மூன்று முறை தோற்கடித்துள்ளனர். அவர்கள் முதலில் ஓவலில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியிலும், பின்னர் அகமதாபாத்தில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் இப்போது தென் ஆப்ரிக்காவில் நடந்து முடிந்த ஜூனியர் உலகக் கோப்பை என 3 முறை வீழ்த்தியுள்ளார்கள்.