இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டனத்தில் நடக்கிறது.இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 253 ரன்கள் சேர்த்தது.
143 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி 255 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதையடுத்து 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து அணி 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதன்மூலம் தற்போது 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. 3வது டெஸ்ட் 15ம் தேதி நடக்கிறது.அதிகபட்சமாக அஷ்வின் மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜாக் கார்லே 73 ரன்கள் குவித்திருந்தார். இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-1 என்று சமன் செய்துள்ளது.