சென்னை: ‘மார்க் ஆண்டனி’ படத்துக்குப் பிறகு நடிகர் விஷால், ஹரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இது.
இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். விஷாலின் 34 வது படமான இதை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி பிரசாத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விவேகா பாடல்களை எழுதுகிறார் .
இந்தப் படத்துக்கு ‘ரத்னம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதைப் படக்குழு டீஸர் மூலம் வெளியிட்டு நேற்று அறிவித்துள்ளது.