சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார்.
ட்ரெயின் திரைப்படம் தனது பயணத்தை தொடங்குவதாக படக்குழு தெரிவித்துள்ளது. தாடி மாற்று மீசையுடன் விஜய் சேதுபதி இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரயில் தடம் மற்றும் ரயில்கள் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மிஷ்கின் இயக்கும் 11-வது திரைப்படமாக இது அமைந்துள்ளது.
விடுதலை 2, மகாராஜா உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சைக்கோ. இவர்கள் இருவரும் இணையும் ட்ரெயின் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.