Breaking News
Home / தகவல்கள் (page 22)

தகவல்கள்

பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த இருவருக்கு அறுவை சிகிச்சை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: “தீபாவளி பண்டிகையையொட்டி, நேற்று இரவு முதல் இன்று காலை வரை, தமிழகத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையைத் தவிர்த்து வேறு எங்கும், பட்டாசுகள் வெடித்து காயம் ஏற்பட்ட நிலையில், யாரும் அனுமதிக்கப்படவில்லை”, என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் …

Read More »

பெருங்களத்தூரை விடுங்க.. கலங்கிய தாம்பரம்.. சென்னையில் பரவும் “சால்மோனெல்லா டைஃபி”.. இதுதான் அறிகுறி

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, முக்கிய எச்சரிக்கையும், அறிவுறுத்தலையும் பொதுமக்களுக்கு விடுத்துள்ளனர். தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தொடர்ந்து மழை பெய்து வருகிறது.. இதனால், மழைக்கால நோய்களாக, காய்ச்சல், சளி பாதிப்புகள் இனிவரும் நாட்களில் அதிகரிக்கும் என்கிறார்கள்.. இப்படித்தான், கடந்த செப்டம்பர் மாதமும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிக …

Read More »

புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் நவ.14 முதல் பரவலாக மழை பெய்யும்

சென்னை: வங்கக்கடலில் வரும் 15-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. வரும் 14-ம் தேதி முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 15-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தமிழகத்தில் வரும் 14-ம் தேதி …

Read More »

வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : தமிழ்நாட்டில் வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சென்னை செனாய் நகரில் உள்ள கஜலட்சுமி காலனி கல்யாண மண்டபத்தில் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழ்நாட்டில் வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ …

Read More »

சித்தா, ஆயுர்வேதம் படித்தவர்கள் அலோபதி சிகிச்சை அளிக்கலாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவு

சென்னை: சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோ பதி மற்றும் யுனானி போன்ற இந்திய மருத்துவம் படித்தவர்கள், அலோபதி சிகிச்சை வழங்கலாம் என அனுமதி அளித்து தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு செப்.8-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2021 நவ.14-ல் மனுவை …

Read More »

கண்களை பாதுகாக்க கண்ணாடி அணிந்து பட்டாசுகளை வெடிப்பது அவசியம்: கண் மருத்துவர் மோகன் ராஜன் அறிவுறுத்தல்

சென்னை: கண்களைப் பாதுகாக்க, கண்ணாடி அணிந்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று சென்னை தி.நகரில் உள்ள ராஜன் கண் மருத்துவமனை தலைவர் மற்றும் மருத்துவ இயக்குநர் மோகன் ராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கண் மருத்துவர் மோகன் ராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசு வெடித்து மகிழ்வது, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். பட்டாசுகளை மிகவும் பாதுகாப்புடன் வெடித்து, தீபாவளியைக் கொண்டாட வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, அதன் துகள்கள் …

Read More »

பொது பயன்பாட்டு இடங்களை வகை மாற்றம் செய்ய கூடாது: மாநகராட்சி, நகராட்சிகளுக்கு நிர்வாக இயக்குநர் எச்சரிக்கை

சென்னை: பூங்கா, விளையாட்டு திடல் உள்ளிட்ட பொது பயன்பாட்டு இடத்தை வகை மாற்றம் செய்வது மற்றும் விலக்கு கோருவதற்கான முன்மொழிவுகளை அனுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளின் ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பூங்கா உள்ளிட்ட பொது இடங்கள் பசுமையான சுற்றுச்சூழல் அழகு மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்டது மட்டுமின்றி, அப்பகுதியில் …

Read More »

திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகம் வளரும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300- ஆக உயர்ந்துள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் இந்த உரிமைத் தொகை கிடைக்கின்ற வரைக்கும், திராவிட மாடல் அரசின் இந்தப் பணி நிச்சயம் தொடரும். இதுதான் இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி. திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாக, தமிழ்நாடு …

Read More »

சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு போனஸ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு 20 சதவீதம், 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை மேம்படுத்த,சம்பள நிலுவையை வழங்க ரூ.63.61கோடி முன்பண கடன் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக வேளாண் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள், பணியாளர்கள் …

Read More »

சென்னையின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணியில் 18,000 போலீஸார்: தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் ஆய்வு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னைமாநகரின் முக்கிய இடங்களில் 18 ஆயிரம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்நேற்று நேரில் ஆய்வு செய்தார். தீபாவளி பண்டிகை நாளை (நவ.12) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு புத்தாடைகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நெரிசலைப் பயன்படுத்தி யாரேனும் சமூக விரோதிகள் …

Read More »