Breaking News
Home / தகவல்கள் (page 21)

தகவல்கள்

மழை தொடர்பான இலவச உதவி எண் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பாதிப்புகளை தெரிவிக்க இலவச உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு நேரத்தில் சென்னை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய …

Read More »

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் 18, 19 தேதிக்கு பதில் வருகிற 25, 26ம் தேதி நடைபெறும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 18, 19 ஆகிய தேதிகளுக்கு பதிலாக 25, 26ம் தேதி நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 27.10.2023 …

Read More »

தீபாவளியை கொண்டாடிவிட்டு திரும்பும்போது சோகம் கவுன்சிலர், 6 மாத குழந்தை உட்பட 13 பேர் விபத்தில் பலி

சென்னை: தீபாவளியை கொண்டாடிவிட்டு திரும்பும்போது விபத்தில் சிக்கி திமுக கவுன்சிலர், 6 மாத குழந்தை உட்பட 13 பேர் பலியாகினர். கோவை மாவட்டம், போத்தனூர் செட்டிபாளையம் 10-வது வார்டு திமுக கவுன்சிலர் சந்தோஷ்குமார் (27). இவரது மனைவி இந்துமதி (23). இவர்களுக்கு பிறந்து 6 மாதமே ஆன காஜல் என்ற பெண் குழந்தை இருந்தது. தீபாவளி பண்டிகையையொட்டி சேலத்தில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் …

Read More »

விரைவில் குரூப்-4 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு

சென்னை: விரைவில் TNPSC குரூப் 4 2023 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று, அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் குரூப் 4 தேர்வு நடத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஜூனியர் அசிஸ்டன்ட், பில் கலெக்டர், தட்டச்சர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில், கூடிய விரைவில் TNPSC குரூப் 4 2023 …

Read More »

உயர்த்தப்பட்ட வாகன வரியை உடனே திரும்ப பெற வேண்டும்- சசிகலா

சென்னை: திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில்‌ உள்ள ஏழை, எளிய, சாமானிய, நடுத்தர மக்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு, உயர்த்தப்பட்ட வாகன வரியை உடனே திரும்ப பெற வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில்‌ அனைத்து விதமான வாகனங்களுக்கும்‌ வரியை திமுக தலைமையிலான அரசு உயர்த்தி இருப்பது மிகவும்‌ கவலையளிக்கிறது. அதாவது சரக்கு வாகனங்கள்‌, வாடகைக்கு இயக்கப்படும்‌ வாகனங்கள்‌, பயணிகள்,‌ போக்குவரத்து வாகனங்கள்‌, சுற்றுலா …

Read More »

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் வரை உச்சநேர கட்டணம் வசூலிக்கப்படாது: தமிழக அரசு

சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உயர்த்தப்பட்ட உச்சநேர மின்கட்டணம், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் வரை வசூலிக்கப்படமாட்டாது என தமிழக அரசின்அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணம், பீக் …

Read More »

ஸ்டான்லி மருத்துவமனை கேண்டீனில் எலி.. மூட உத்தரவிட்ட முதல்வர்..!

சென்னை : சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டினில் இருந்த உணவுகளை எலி சாப்பிடுவது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில் இது குறித்து மருத்துவமனை முதல்வர் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் கேண்டில் உள்ள உணவு பண்டங்களை எலி உண்டதாகவும் எலி உண்ட உணவு பண்டங்களை தான் விற்பனை செய்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் அளித்தனர். இது குறித்த புகைப்படங்கள் …

Read More »

தியாகி சங்கரய்யாவுக்கு உடல்நலக்குறைவு – அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று சங்கரய்யாவை பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக பேசினர். சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் அவருடன் இருந்து சிகிச்சைகளை …

Read More »

ஒரு இன்ச் கூட பாஜக வளரல.. மோடிக்கே 50% சான்ஸ்தான் இருக்கு.. அதிமுக சூப்பர்.. போட்டு தாக்கிய பிரபலம்

சென்னை: “எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி” என்று புகழாரம் சூட்டிவந்த பிரபல நடிகை காயத்ரி ரகுராம், தமிழக பாஜக குறித்து மீண்டும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த வருடம், மூத்த தலைவர்கள், வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் பாஜக மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.. மாநில பொருளாளராக எஸ்.ஆர். சேகர் நியமனம் செய்யப்பட்டிருந்தார். ஆக …

Read More »

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Read More »