சென்னை : சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டினில் இருந்த உணவுகளை எலி சாப்பிடுவது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில் இது குறித்து மருத்துவமனை முதல்வர் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் கேண்டில் உள்ள உணவு பண்டங்களை எலி உண்டதாகவும் எலி உண்ட உணவு பண்டங்களை தான் விற்பனை செய்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் அளித்தனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.
இதையடுத்து இது குறித்து விசாரணை செய்த மருத்துவமனை முதல்வர் அந்த கேண்டினை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக கேண்டீன் மூடப்பட்டது.
மேலும் இது குறித்து தகுந்த முறையில் விசாரணை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் சாப்பிடும் உணவு எலி சாப்பிட்ட உணவு என்ற தகவல் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது