Breaking News
Home / தகவல்கள் (page 19)

தகவல்கள்

நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள பொது விநியோக குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்: சுகாதாரத் துறை

சென்னை: நோய் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள பொது விநியோககுடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், தமிழகம் முழுவதும் டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்னும் 2 மாதங்களுக்கு காய்ச்சல்களின் பாதிப்புஅதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஏடிஸ் கொசுக்களின்உற்பத்தி அதிகரித்துள்ளதால், டெங்கு பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், …

Read More »

முதல்வர் காப்பீட்டு முகாம் டிச.2-க்கு தள்ளிவைப்பு

சென்னை: முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் புதிய குடும்பங்களை சேர்க்க, தமிழகம் முழுவதும் நாளை நடக்கவிருந்த சிறப்பு முகாம் டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் 1.44 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்கள் நவம்பர் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்த முகாம்களில் காப்பீட்டு திட்டத்தில் …

Read More »

கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கு கோவிட் பணிச்சான்று: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியவர்களுக்கு, அரசு மருத்துவர்கள் தேர்வில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்களைப் பெற பயிற்சி மருத்துவர்களுக்கும் உரிமை உள்ளது என உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு “கோவிட் பணி” சான்று வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 1,021 மருத்துவர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் 2022, அக்டோபர் 11-ல் அறிவிப்பாணை வெளியிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் …

Read More »

சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய 7 விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் 3-வது திட்ட விரிவாக்கப் பணிக்காக மேல்மா உள்ளிட்ட 11 ஊராட்சிகளில், 3,174ஏக்கர் விளை நிலங்களைக் கைப்பற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து `மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம்’ சார்பில் கடந்த ஜுலை 2-ம் தேதிமுதல் 124 நாட்களுக்கு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. மேல்மா கூட்டுசாலையில் பந்தல் அமைத்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். மேலும், …

Read More »

வடக்கு ரயில்வேயில் நடைபெற உள்ள ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக ஜன., பிப்.-ல் டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து..!!

சென்னை: வடக்கு ரயில்வேயில் நடைபெற உள்ள ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக ஜனவரி, பிப்ரவரியில் டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. ஆக்ரா கோட்டத்தில் மதுரா ரயில் நிலையம், மதுரா – பல்வால் ரயில் நிலைய பிரிவில் ரயில்பாதை, சிக்னல் பணிகள் நடைபெறவுள்ளன. 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

Read More »

கனமழையினால் ஏற்பட்ட இழப்பில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கைகளை, போர்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: கனமழையினால் ஏற்பட்ட இழப்பில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை, போர்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்துவருகிறது. இந்த மழை விவசாயிகளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் நெற்பயிர் மழையில் முழ்கியதால் பெரும் சோகத்தில் உள்ளனர். நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய டெல்லா …

Read More »

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு …

Read More »

பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் 2,582 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி போட்டித் தேர்வு ஜனவரி 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு வரும் 30-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 2,582 ஆக உயர்த்தி டிஆர்பி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் …

Read More »

4ஜி சேவை தொடங்கப்படாத நிலையில் சிம் கார்டுகளை தரம் உயர்த்த போவதாக பிஎஸ்என்எல் அறிவிப்பு: வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம்

சென்னை: சென்னையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை இன்னும் தொடங்கப்படாத நிலையில், வாடிக்கையாளர்கள் தற்போது பயன்படுத்தி வரும் சிம் கார்டை 4ஜி சிம் கார்டாக தரம் உயர்த்தி தருவதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது, அவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விரைவான இணையதள வசதியை வழங்குவதற்காக தற்போது 5ஜி இணைய சேவை வசதியை வழங்கி வருகின்றன. அடுத்தக் கட்டமாக, இன்னும் அதிவேக 6ஜி சேவையை …

Read More »

நகராட்சி நிர்வாகத்துறையின் 2534 பணிகளை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பிடுக: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த வேண்டிய போட்டித் தேர்வை நகராட்சி நிர்வாகத் துறையே நடத்துவதற்கு எந்த நியாயமான காரணங்களும் இல்லை. டிஎன்பிஎஸ்சியை ஒதுக்கி வைத்து விட்டு, அனுபவமே இல்லாத அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க நகராட்சி நிர்வாகம் துடிக்கிறது என்றால், அதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தான் தோன்றுகிறது”, என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் …

Read More »