Breaking News
Home / விளையாட்டு (page 2)

விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டனத்தில் நடக்கிறது.இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 253 ரன்கள் சேர்த்தது.143 ரன்கள் முன்னிலையுடன் …

Read More »

AUS vs WI முதல் ஒருநாள் போட்டி | மே.இ.தீவுகளை வீழ்த்தியது ஆஸி.

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. மெல்பர்ன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 48.4 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கீசி கார்ட்டி 108 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 88 ரன்களும் ராஸ்டன் சேஸ் 67 பந்துகளில், 7 …

Read More »

கேலோ இந்தியா விளையாட்டு: 91 பதக்கங்கள் குவித்து தமிழகம் சாதனை

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி சென்னை, திருச்சி,மதுரை,கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று பளுதூக்குதல் போட்டிகள் நடைபெற்றன. மகளிருக்கான 81 கிலோ எடைப்பிரிவில் தமிழகத்தின் ஆர்.பி.கீர்த்தனா 188 கிலோ (ஸ்னாட்ச் 85+கிளீன் & ஜெர்க் 103) எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு தமிழக வீராங்கனையான கே.ஓவியா 184 கிலோ (ஸ்னாட்ச் 78+ கிளீன் …

Read More »

IND vs ENG முதல் டெஸ்ட் | மீண்டும் ஜொலித்த இந்திய சுழல் பந்துவீச்சு – இங்கிலாந்து 246 ரன்களில் ஆல் அவுட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் …

Read More »

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி – தமிழகத்தின் தங்க வேட்டை தொடர்கிறது

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 5-வது நாளான நேற்றும் தமிழக வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றனர். மேலக் கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற டிராக் சைக்கிள் பந்தயத்தில் மகளிருக்கான 2 கிலோ மீட்டர் பிரிவில் தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த …

Read More »

மார்ச் 22-ல் தொடங்குகிறது ஐபிஎல் 2024 தொடர்: மே 26-ல் இறுதிப் போட்டி?

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 26-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் பொதுத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே வரவிருக்கும் சீசனுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிகிறது. தேர்தல்கள் இருந்தாலும் ஐபிஎல் போட்டிகள் முழுதும் இந்தியாவிலேயே நடைபெறும் என்றுதான் தெரிகிறது. இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பிசிசிஐ நிர்வாகி கூறியதாக வெளியான செய்தியில், ‘நாங்கள் ஐபிஎல் …

Read More »

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு – தமிழகத்துக்கு மேலும் 2 தங்கப் பதக்கம்

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தமிழகம் மேலும் 2 தங்கப் பதக்கம் வென்றது. 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியின் 3வது நாளான நேற்று மகளிருக்கான பாரம்பரிய யோகா போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை எஸ்.ஹெச்.நவ்யா 64.75 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். மேற்கு வங்க வீராங்கனையான ஆரண்ய ஹுதைட் 64.42 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், அதே மாநிலத்தைச் சேர்ந்த ரிது மொண்டல் 63.5 புள்ளிகளுடன் …

Read More »

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கோலாகல ஆரம்பம்: புதுப்பொலிவுடன் டிடி தமிழை தொடங்கினார் பிரதமர் மோடி

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 13-வது கேலோ இந்தியா போட்டி, ரூ.39 கோடியில் மேம்படுத்தப்பட்ட, ‘டிடி தமிழ்’ தொலைக்காட்சி என்ற புதுப்பொலிவு பெற்ற சேவை ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 13-வது கேலோ இந்தியா போட்டிகள் ஜன.19 தொடங்கி வரும் 31-ம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் நடைபெறுகிறது. போட்டிக்கான சுடரை ஏற்றி வைத்து பிரதமர் மோடி …

Read More »

ஜன.24-ல் அலங்காநல்லூர் கீழக்கரையில் புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை” வரும் 24-ம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் கீழக்கரைக்கு வருகிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்சாகமாக கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல்.ஜல்லிக்கட்டு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் …

Read More »

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு: பிரம்மாண்டமாக தயாராகும் சென்னை நேரு விளையாட்டு மைதானம்

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதுக்குட்பட்ட பிரிவில் சுமார் 5,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த ஆண்டு டெமோ விளையாட்டாக …

Read More »